Published : 26 Mar 2018 11:08 AM
Last Updated : 26 Mar 2018 11:08 AM

பேட்டரி கார் தயாரிக்க ஃபோர்டுடன் கூட்டு சேர்கிறது மஹிந்திரா

வா

கன உற்பத்தியில் முன்னணியில் திகழும் இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்துடன் கூட்டு சேர்ந்து சில குறிப்பிட்ட ரக கார்களைத் தயாரிக்க அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது

இரு நிறுவனங்களும் இணைந்து நடுத்தர ரக வாகனங்கள், எஸ்யுவி-க்கள் மற்றும் சிறிய ரக பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன. உத்தி சார் அடிப்படையில் இரு நிறுவனங்களும் 5 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

எஸ்யுவி தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா நிறுவனமும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஃபோர்டு நிறுவனமும் கூட்டாக சேர்ந்து புதிதாக மத்திய ரக எஸ்யுவி-க்களை உருவாக்க உள்ளன. இந்த வாகனமானது மஹிந்திரா ஆலையில் உருவாகும். ஆனால் இரு நிறுவனங்களும் இந்த வாகனத்தை தத்தமது விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளன.

இதேபோல இரு நிறுவனங்களும் இணைந்து பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளன. இதற்கான பவர் டிரைன் தொழில் நுட்பத்தை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது, ஏற்கெனவே மஹிந்திரா பயன்படுத்தும் பவர் டிரைன்களை ஃபோர்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு அளிப்பது உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இரு நிறுவனங்களும் இணைந்து வாடிக்கையாளர்களின் கார் குறித்த எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் வாகனங்களை வடிவமைக்க உள்ளன.

இரு நிறுவனங்களிடையிலான கூட்டுறவு இத்துறையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் என்று மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். இரு நிறுவனங்களும் தத்தமது பலத்தை அறிந்து கூட்டாக செயல்படும்போது அதை பகிர்ந்து கொண்டு செயலாற்றவும் ஒப்புக் கொண்டுள்ளன.

இரு நிறுவன பணியாளர்களும் மூன்று ஆண்டுகள் இணைந்து பணியாற்ற ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. மேலும் உத்தி சார் அடிப்படையில் எந்தெந்த பிரிவுகளில் கூட்டு தேவை என்பதை அறிந்து அதை மஹிந்திரா அளிக்கும். மஹிந்திராவின் தயாரிப்புகளை ஃபோர்டு நிறுவனம் வெளிநாடுகளில் விற்பனை செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து எதிர்கால போக்குவரத்து வாகனங்கள் உருவாக்கம் குறித்தும் ஆலோசிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x