Published : 05 Mar 2018 11:55 AM
Last Updated : 05 Mar 2018 11:55 AM

வாகன பழுதுபார்ப்பு வசதி: பேடிஎம் மால், டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் ஒப்பந்தம்

வா

கனங்களைப் பொறுத்தமட்டில் அது மோட்டார் சைக்கிளாக இருந்தாலும் சரி, காராக இருந்தாலும் சரி அது இயங்கும் வரைதான். நடு வழியில் அது நின்று போனால் அப்போது ஏற்படும் எரிச்சலுக்கு அளவே இருக்காது. இரு சக்கர வாகனமாயிருந்தால் பக்கத்தில் எங்காவது நிறுத்திவிட்டு ஆட்டோ அல்லது வேறு வாகனத்தில் பயணத்தைத் தொடரலாம். பிறகு மெக்கானிக்கை அழைத்துவந்து பழுதுபார்த்து எடுத்துச் செல்லலாம். அதுவே காராக இருந்தால் அதுவும் நீண்ட பயணத்தின்போது கார் மக்கர் செய்தால் எப்படியிருக்கும்? அத்தகைய சூழலில் உங்களுக்கு உதவுவதற்காகவே டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் நிறுவனமும் பேடிஎம் மால் நிறுவனமும் ஒன்றிணைந்துள்ளன.

சாலையோர மீட்பு என்ற அடிப்படையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு இத்தகைய சேவைகளை 24 மணி நேரமும் வாரம் முழுவதும் அளிக்க முடிவு செய்துள்ளன. வாடிக்கையாளர்கள் தனியாகவும் அல்லது வாகனத்தை வாங்கும்போதே இத்தகைய வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.

இத்தகைய வசதியை வாடிக்கையாளர்கள் டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் வாயிலாக 28 மாநிலங்களில் 1,795 நகங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான சிறப்பு பாதுகாப்பு உதவி வசதியையும் இது உருவாக்கியுள்ளது.

முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.

டிஜிட்டல் மூலமான இணைப்பில் பல லட்சம் கார் மற்றும் பைக் வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என இரு நிறுவனங்களும் கருதுகின்றன. இந்த வசதியை உறுப்பினர் அல்லாத பிற உறுப்பினர்களுக்கும் அளிப்பதாக டிவிஎஸ் ஆட்டோ அசிஸ்ட் தெரிவித்துள்ளது.

வாகனத்தை சர்வீஸ் மையத்துக்கு எடுத்துச்செல்லுதல், எரிபொருள் தீர்ந்து போதல், சாவி பிரச்சினை, டயர் பிரச்சினை, முதலுதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் இதன் மூலம் பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x