Published : 06 May 2019 12:16 PM
Last Updated : 06 May 2019 12:16 PM

வெற்றி மொழி: வில்லியம் எட்வர்ட்ஸ் டெமிங்

1900-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வாழ்ந்த வில்லியம் எட்வர்ட்ஸ் டெமிங் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர், விஞ்ஞானி, புள்ளியியல் நிபுணர், எழுத்தாளர், பேராசிரியர் மற்றும் மேலாண்மை ஆலோசகர் ஆவார். தொழில்துறைக்கு புள்ளியியல் முறைகளின் பயன்பாடு உட்பட பல்வேறு வழிகளில் வடிவமைப்பு முறைகளை அறிமுகப்படுத்தியவர்.

ஜப்பான் நாட்டின் புதுமை, உயர் தரம் மற்றும் அதன் பொருளாதார சக்திகள் ஆகியவற்றில் இவரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் உண்டு. மேலும் ஜப்பானிய பாரம்பரியத்தில் வேறு எந்தவொரு தனிநபரை விடவும், அந்நாட்டு உற்பத்தி மற்றும் வணிகம் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவராகக் கருதப்படுகிறார்

# ஒரு செயல்முறையாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று விவரிக்க முடியவில்லை எனில், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது.

# வணிகத்தில் லாபமானது, திரும்பத் திரும்ப வரும் வாடிக்கையாளர்களிடமிருந்தே கிடைக்கிறது.

# தரமே ஒரு தொழிலாளரின் பெருமை.

# சரியான கேள்வியை எப்படி கேட்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், எதையும் உங்களால் கண்டறிய முடியாது.

# தவறுகள் செய்ய மக்கள் விரும்புவதில்லை.

# நாம், ஏன் ஒரு வேலை செய்ய வேண்டும் என்பதில் முக்கியத்துவம் இருக்க வேண்டியது அவசியம்.

# ஒரு மோசமான அமைப்பு ஒவ்வொரு முறையும் ஒரு நல்ல மனிதரை வென்றுவிடும்.

# உங்களுக்கு என்ன தெரியாது என்பது உங்களுக்கு தெரியாது.

# முறை இல்லாத ஒரு இலக்கு என்பது கொடூரமானது.

# அனைத்து பதில்களையும் கொண்டிருப்பவர் எவருமில்லை.

# ஒரு விதி கண்டிப்பாக நோக்கத்தோடு பொருந்த வேண்டும்.

# எல்லோரும், யாரோ ஒருவரின் வாடிக்கையாளர் அல்லது யாரோ ஒருவருக்கு சப்ளையர்.

# தங்கள் பணியில் மகிழ்ச்சியைக் கொண்டிருப் பவர்களிடமிருந்தே புதுமை வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x