Published : 25 Mar 2019 12:01 PM
Last Updated : 25 Mar 2019 12:01 PM

வெற்றி மொழி: மேரி கியூரி

1879-ம் ஆண்டு முதல் 1934-ம் ஆண்டு வரை வாழ்ந்த மேரி கியூரி புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரெஞ்சு விஞ்ஞானி ஆவார். பொலோனியம் மற்றும் ரேடியம் போன்ற கதிர்வீச்சு தனிமங்களை கண்டுபிடித்தவர் இவர். நோபல் பரிசினைப் பெற்ற முதல் பெண்மணியான இவர், இரண்டுமுறை இவ்விருதினை பெற்ற முதல் நபர் மற்றும் ஒரே பெண் போன்ற புகழுக்குச் சொந்தக்காரர். மேலும், இயற்பியல் மற்றும் வேதியியல் என இரண்டு வெவ்வேறு அறிவியல்களில் நோபல் பரிசு வென்ற ஒரே நபரும் இவரே.

 

# நாம் ஏதோவொரு பரிசைப் பெற்றிருக்கிறோம் மற்றும் இந்த விஷயம் அடையப்பட வேண்டிய ஒன்று என்பதை நாம் நம்ப வேண்டும்.

# மக்களைப் பற்றி குறைவான ஆர்வத்துடனும் கருத்துகளைப் பற்றி அதிக ஆர்வத்துடனும் இருங்கள்.

# வாழ்க்கையில் எதுவும் பயப்பட வேண்டிய விஷயமில்லை, அது புரிந்துகொள்ள வேண்டியது மட்டுமே.

# விஞ்ஞானம் பெரும் அழகு என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவர்.

# வாழ்க்கை என்பது நம்மில் எவருக்கும் எளிதான விஷயம் அல்ல.

# தனிநபர்களை மேம்படுத்தாமல் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் நீங்கள் நம்பிக்கை வைக்க முடியாது.

# விடாமுயற்சியைக் கொண்டிருப்பதோடு, அனைத்துக்கும் மேலாக நம்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

# அதிகப்படியான விஷயங்களை அறிந்துகொள்வதற்கான நேரம் இதுவே, இதனால் நமது அச்சம் குறையலாம்.

# முன்னேற்றத்துக்கான வழி விரைவானதோ அல்லது எளிதானதோ அல்ல என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

# சரியான செயல் ஒன்றை செய்து கொண்டிருக்கும்போது நீங்கள் ஒருபோதும் பயப்படக்கூடாது.

# என்ன செய்து முடிக்கப்பட்டது என்பதை ஒருவர் கவனிக்க வேண்டியதில்லை; இன்னும் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x