Published : 11 Feb 2019 11:07 AM
Last Updated : 11 Feb 2019 11:07 AM

வெற்றி மொழி: ஹென்றி நௌவென்

1932-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஹென்றி நௌவென் டச்சு கத்தோலிக்க பாதிரியார், பேராசிரியர், எழுத்தா

ளர், மதகுருமார் மற்றும் சிறந்த இறையியலாளர் ஆவார். உளவியல், ஆன்மீகம், சமூகம் மற்றும் சமூகநீதி ஆகியன இவரது முதன்மையான விருப்பங்களாக இருந்தன. இருபது வருடங்களுக்

கும் மேலாக யேல், ஹார்வர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறந்த கல்வி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தனது இறப்பிற்கு முன்னதாக சுமார் 39 புத்தகங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவரது புத்தகங்கள் உலகம் முழுவதும் முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டு, ஏழு மில்லியன் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளன.

 

# மகிழ்ச்சி எளிமையாக நமக்கு கிடைத்துவிடாது. நாம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து மகிழ்ச்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

# பயம் நெருங்கிய உறவின் பெரிய எதிரி என்றால், அன்பு அதன் உண்மையான நண்பன்.

# நமது மிகச்சிறந்த பூரணத்துவம் நம்மை மற்றவர்களுக்கு கொடுப்பதில் உள்ளது.

# ஒவ்வொரு நாளும் ஒரு ஆச்சரியத்தை தன்னுள் கொண்டுள்ளது.

# நாம் யார் என்பதை நாம் தொடர்ந்து மறந்துவிடுவது நம் வாழ்வின் துயரங்களில் ஒன்று.

# ஒவ்வொரு துன்பத்திற்கு எதிராகவும் கிளர்ச்சி செய்யாமல் இருப்பதே பொறுமையை கற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.

# நீங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதையே கடவுள் விரும்புகிறார்.

# நமது இதயமே நம்மை மனிதனாக ஆக்குகிறது, நமது மனம் அல்ல.

# உண்மையான அக்கறையுள்ள இரண்டு இதயங்களை தொலைவு ஒருபோதும் பிரித்துவிடாது.

# காத்திருக்கும் நேரம் என்பது கற்றுக் கொள்வதற்கான நேரம் ஆகும்.

# மௌனமே பேசுவதற்கு நமக்கு கற்றுத் தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x