Published : 28 Nov 2018 10:38 AM
Last Updated : 28 Nov 2018 10:38 AM

பள்ளியில் திரைப்பட விழா!

திருப்பூர் வடக்கு பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கல்வியோடு உயர்ந்த ரசனையையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவருகிறார்கள். சமீபத்தில் ஒரு நாள் முழுவதும் உலகத் திரைப்படங்களைத் திரையிட்டார்கள். பிறகு ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் மாணவர்களோடு ஆசிரியர்கள் கலந்துரையாடினார்கள்.

‘தி பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினஸ்’, ’லைப் ஆஃப் பை’,  ’தி நட் ஜாப்’, ’சில்ரன் ஆஃப் ஹெவன்’, சாப்ளினின் ’மாடர்ன் டைம்ஸ்’, ’ப்ளை அவே ஹோம்’, ’பூக்குட்டி’, ’செல்லம்’ உட்பட சிறப்புத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

palli-2jpgசெளபர்ணிகா - ஸ்ரீராம்

”பாடல், சண்டைக் காட்சிகள் இல்லாமல்கூடத் திரைப்படம் எடுக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருந்தது. சில்ட்ரன் ஆஃப் ஹெவன் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு ஷூவுக்காகப் பாடுபடும் சிறுவன், அண்ணன் – தங்கை பாசம் எல்லாம் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன்” என்கிறார் நான்காம் வகுப்பு மாணவி செளபர்ணிகா.

”எனக்குப் பூக்குட்டி திரைப்படம் பிடிச்சிருந்தது. நாம யாரையும் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது. மத்தவங்களுக்கு உதவணும் என்பதை அந்தப் படம் எனக்குச் சொன்னது” என்கிறார் ஸ்ரீராம்.

தலைமை ஆசிரியர் ஆரோக்ய ஜாஸ்மின் மாலா, “உலகத் திரைப்பட விழாவை முன்னெடுக்க வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்தோம். ஆசிரியர்களின் முயற்சியால் வெற்றிகரமாக நடத்திவிட்டோம். திரைப்படங்களைப் பார்த்ததோடு, அவற்றைப் பற்றிய விமர்சனங்களையும் அழகாக வெளிப்படுத்தினார்கள் மாணவர்கள். புரியாத விஷயங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள். இதுபோன்ற திரைப்பட விழாவை ஆண்டுதோறும் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்கிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x