Published : 02 Oct 2018 12:47 PM
Last Updated : 02 Oct 2018 12:47 PM

வேலை வேண்டுமா: இன்ஜினீயர்களுக்கு மத்திய அரசுப் பணி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி) மத்திய அரசுத் துறையில் பொறியாளர்களுக்கான 581 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இன்ஜினீயரிங் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது.

வயது: 01.01.2019 அன்று, குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு இடஒதுக்கீட்டு விதிமுறைகளின் படி வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்குக் கட்டணமில்லை. பிறருக்குக் கட்டணம் ரூ.200.

உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 22 அன்று மாலை 6:00 மணிக்குள் www.upsconline.nic.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாட்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2018

முதல்நிலைத் தேர்வு: 06.01.2019

கூடுதல் விவரங்களுக்கு: https://bit.ly/2Q8splZ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x