Published : 02 Jul 2018 10:54 AM
Last Updated : 02 Jul 2018 10:54 AM

இந்தியாவில் ஜீப் கம்பாஸ் காருக்கு கிடைத்த வரவேற்பு: புதிய மாடல்களை அறிமுகப்படுத்த கிரைஸ்லர் தீவிரம்

ந்திய சந்தையில் ஜீப் கம்பாஸ் காருக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து மேலும் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய கிரைஸ்லர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

4 மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள எஸ்யுவி மற்றும் மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்ட நடுத்தர ரக பிரிவு எஸ்யுவிக்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நான்கு மீட்டருக்கு குறைந்த பிரிவிலான எஸ்யுவி கார்கள் மாருதி சுஸுகி விடாரா பிரீஸா மற்றும் எகோ ஸ்போர்ட் ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக அமையும்.

இப்போது இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜீப் கம்பாஸ் கார் டொயோடா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு என்டேவருக்கு போட்டியாக அமைந்துள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் இதுவரை 23 ஆயிரம் ஜீப் கம்பாஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. அதேசமயம் இங்கிருந்து 8 ஆயிரம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி வலதுபுற ஸ்டீரிங் கொண்ட வாகனங்களை விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதெனவும் முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலம் ரஞ்சன்கோனிலுள்ள ஃபியட் ஆட்டோமொபைல் ஆலையில் இந்த கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்தியாவில் எஸ்யுவி கார்களுக்கான சந்தை தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அதேசமயம் 4 மீட்டருக்கு குறைவான எஸ்யுவி-க்களுக்கான சந்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே கிரைஸ்லர் நிறுவனம் நடுத்தர பிரிவு கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

2022-ம் ஆண்டில் எஸ்யுவிக்ளின் விற்பனை 16 லட்சமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில் விற்பனையகம் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவை மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க கிரைஸ்லர் முடிவு செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x