Last Updated : 30 Aug, 2014 02:30 PM

 

Published : 30 Aug 2014 02:30 PM
Last Updated : 30 Aug 2014 02:30 PM

பொய் சொல்லப் போறோம்!

பொய் சொல்வது கொடூரமானது என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். ஆனால், ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள், இருக்க விரும்புபவர்கள், எல்லா நேரத்திலும் உண்மை விளம்பியாக இருந்தால் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள் என்பது ஊரறிந்த உண்மை. ரிலேஷன்ஷிப்பில் தொடர நினைப்பவர்கள், “பொய்மை என்பது தீமையிலாத சொல்”, என்று அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். ‘‘நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை’’, என்று நடந்து கொண்டால் ரிலேஷன்ஷிப்பில் கட்டாயம் பல ஆபத்துகளைச் சந்திப்பீர்கள்.

ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் உங்கள் பாய் ஃப்ரண்ட் / கேர்ள் ஃப்ரண்டிடம் பிரச்சினைக்குள்ளாகாமல் இருப்பதற்காகச் சொல்ல வேண்டிய, சொல்லக் கூடிய சில ஒயிட் லைஸ்...

1. யெஸ் டியர், எனக்குப் புரியுது!

உங்கள் பார்ட்னர், உங்களுக்குப் பிடிக்காத அல்லது புரியாத ஒரு விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து புலம்பித் தீர்க்கிறார் என்றால், அப்போது நீங்கள் சொல்ல வேண்டியது இதைத்தான் , “ஐ அண்டர்ஸ்டான்ட் டியர்”. இந்த வாசகம் பொய்யாக இருந்தாலும் இதனால் குடி ஒன்றும் மூழ்கிப் போகாது.

2. உன் ஃப்ரண்டைப் போல யாருமில்லை!

உங்கள் பார்ட்னருடைய ‘பெஸ்டீஸ்’ஸிடம் நீங்கள் நட்பு பாராட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், அவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை நேரடியாகச் சொல்லத் தேவையில்லை. ‘உன் ஃப்ரண்ட்ஸைப் போல நல்லவங்க யாருமே கிடையாது’ என்ற பொய் சொல்வதனால் ரிலேஷன்ஷிப், ஃப்ரண்ட்ஷிப் என இரண்டையும் உங்கள் பார்ட்னர் ‘பேலன்ஸ்’ செய்ய ஒரு விதத்தில் உதவலாம்.

3.தேங்க் யூ ஸோ மச்! எனக்குப் பிடிச்சிருக்கு!

உங்கள் பார்ட்னர் உங்களுக்குப் பரிசு கொடுத்தால், அதைத் திறந்த மனதுடன் பாராட்டுங்கள். உங்களுக்கு அந்தப் பரிசு பிடிக்கவில்லையென்றாலும், “தேங்க் யூ ஸோ மச்! எனக்குப் பிடிச்சிருக்கு!” என்று சொல்லும் பொய்யால் ஆபத்து ஒன்றுமில்லை.

இந்தப் பொய்யை நம்பும்படி கூறினால் பல தேவை யில்லாத டிராமாக்களைத் தவிர்க்கலாம். உங்கள் பார்ட்னர் ஒரு புது டிரஸ் அணிந்து வந்து, நன்றாக இருக்கிறதா என்று கேட்டால், அந்த டிரஸ் அவர்கள் மனதிற்கு ஏற்கெனவே பிடித்துவிட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் உங்களிடம் கேட்பதற்கு ஒரே காரணம், நீங்களும் அதையே உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுந்தான். அதை விடுத்து, “டிரஸ் நல்லா இல்லை” என்று உண்மையைச் சொன்னால் விபரீத மான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

4. நீ அழகாய் இருக்கிறாய்!

இந்தப் பொய்யை நம்பும்படி கூறினால் பல தேவை யில்லாத டிராமாக்களைத் தவிர்க்கலாம். உங்கள் பார்ட்னர் ஒரு புது டிரஸ் அணிந்து வந்து, நன்றாக இருக்கிறதா என்று கேட்டால், அந்த டிரஸ் அவர்கள் மனதிற்கு ஏற்கெனவே பிடித்துவிட்டது என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் உங்களிடம் கேட்பதற்கு ஒரே காரணம், நீங்களும் அதையே உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுந்தான். அதை விடுத்து, “டிரஸ் நல்லா இல்லை” என்று உண்மையைச் சொன்னால் விபரீத மான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் உங்கள் பெஸ்டீயிடம் சுவாரஸ்யமான ‘காஸிப்பு’களைப் பேசிக்கொண்டிருக்கும்போது பல தடவை உங்கள் பார்ட்னரின் போன் அழைப்பு ஹோல்டில் போயிருக்கும். அதை நீங்கள் அலட்சியப்படுத்தியும் இருப்பீர்கள். ஆனால், நிச்சயம் மறுபடியும் உங்கள் பார்ட்னரிடம் பேசும்போது மறக்காமல், இவ்வளவு நேரம் யாரிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வியை எதிர்கொள்வீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும். அவரிடம் ஃப்ரண்ட் கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன் என்று உண்மையைச் சொன்னால் தீர்ந்தது. அம்மா/அப்பா/அக்கா/தங்கை/ தம்பி/அண்ணா எனக் குடும்பத்தில் இருக்கும் யார் பெயரையாவது சொல்லி தப்பித்துக்கொள்வதுதான் சிறந்தது.

5.வீட்டில் இருந்துதான் போன்

நீங்கள் உங்கள் பெஸ்டீயிடம் சுவாரஸ்யமான ‘காஸிப்பு’களைப் பேசிக்கொண்டிருக்கும்போது பல தடவை உங்கள் பார்ட்னரின் போன் அழைப்பு ஹோல்டில் போயிருக்கும். அதை நீங்கள் அலட்சியப்படுத்தியும் இருப்பீர்கள். ஆனால், நிச்சயம் மறுபடியும் உங்கள் பார்ட்னரிடம் பேசும்போது மறக்காமல், இவ்வளவு நேரம் யாரிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வியை எதிர்கொள்வீர்கள் என்பது உங்களுக்கும் தெரியும்.

அவரிடம் ஃப்ரண்ட் கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன் என்று உண்மையைச் சொன்னால் தீர்ந்தது. அம்மா/அப்பா/அக்கா/தங்கை/ தம்பி/அண்ணா எனக் குடும்பத்தில் இருக்கும் யார் பெயரையாவது சொல்லி தப்பித்துக்கொள்வதுதான் சிறந்தது.

6. ஐ மிஸ்டு யூ டூ!

நீங்கள் உங்கள் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ வெளியே சென்று நன்றாக ‘என்ஜாய்’ செய்துவிட்டு வந்திருப்பீர்கள். உங்கள் பார்ட்னரை அங்கிருக்கும்வரை முற்றிலும் மறந்துகூடப் போயிருப்பீர்கள். ஆனால், திரும்பி வந்து உங்கள் பார்ட்னரிடம் பேசும்போது, அவர்கள் கட்டாயம் ‘மிஸ்டு யூ சோ மச்’ என்று சொல்வார்கள். பதிலுக்குக் கட்டாயம் நீங்களும் ‘ஐ மிஸ்டு யூ டூ!’ என்று மட்டுந்தான் சொல்ல வேண்டும். ‘ஹாடு கிரேட் டைம் வித் மை ஃப்ரண்ட்ஸ்’ என்று சொன்னால் தொலைந்தீர்கள்.

7. நான் பொய்யே சொல்வதில்லை!

“நான் பொய்யே சொல்வதில்லை!” என்ற பொய்யை உறுதியாக உங்கள் பார்ட்னர் நம்பும்படி சொல்லித்தான் ஆக வேண்டும்.

இவற்றையெல்லாம் கடைப்பிடித்தால் உங்கள் ரிலேஷன்ஷிப்பில் வரும் பிரச்சினைகளை ஓரளவுக்குச் சமாளிக்கலாம். ஆனால், ரிலேஷன்ஷிப்பில் ‘ஒயிட் லைஸ்’ எனப்படும் ஆபத்தில்லாத பொய்களை மட்டும்தான் சொல்ல வேண்டும். மோசமான பொய்களைச் சொன்னால் அதற்கான மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x