Published : 16 Feb 2024 06:03 AM
Last Updated : 16 Feb 2024 06:03 AM

பாப்கார்ன்: விழுந்தால் சாம்பியன்!

இங்கிலாந்தில் இளைஞர்களின் விருப்பமான விளையாட்டுகளில் ஒன்று ‘உலக பிளாக் புட்டிங் சாம்பியன்ஷிப்’. கறுப்புப் பந்துகளை மேலே எறிந்து, ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைக்கும் விநோதமான விளையாட்டு இது.

ராம்ஸ்பாட்டம் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான போட்டியாளர்கள் குவிந்துவிடுவார்கள். குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்.

போட்டி இதுதான். இருபது அடி உயரத்தில் ஒரு தட்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் 5 ரொட்டித் துண்டுகள் இருக்கும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இந்த வாய்ப்புகளில் போட்டியாளர்கள் கறுப்பு பந்தை மேலே எறிந்து, ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைக்க வேண்டும்.

ரொட்டித் துண்டுகளைக் கீழே விழ வைப்பவரே வெற்றியாளர். ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில்தான் இந்தப் போட்டி நடைபெறும் என்றாலும், இந்தப் போட்டிக்காக 6 மாதங்களுக்கு முன்பிருந்தே பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவார்கள்.

இந்த விநோதமானப் போட்டி இங்கிலாந்தில் நூறாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. பழமையான போட்டியாக இருந்தாலும், விநோதமாக இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டுக்குத் தனி மவுசுதான்.

உருவம் மாற்றும் விளையாட்டு! - சிறார்களும் இளைஞர்களும் விரும்பி விளையாடும் ரூபிக் க்யூப் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு அது. அதைப் போலவே ஐ.க்யூ.வை வளர்க்க உதவும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகிறது, ‘ட்ரைடோ மேக்னடிக் பில்டிங் பொம்மை.’

பிளடோனிக் முறையில் உருவான விளையாட்டு இது. இந்த விளையாட்டில், காந்தத்தன்மைக் கொண்ட ஒவ்வொரு பக்கமும் மற்றொரு பக்கத்தை ஈர்த்துக்கொள்ளும். இதை வைத்து விரும்பிய உருவத்தையோ கட்டமைப்பையோ உருவாக்கலாம். இதுதான் இந்த விளையாட்டின் ஸ்பெஷல்.

கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுவதில் தொடங்கி மன அழுத்தத்தைக் குறைப்பதுவரை ட்ரைடோ ஓர் ஆயுதமாகவும் உள்ளதாம். ஆன்லைனில் ட்ரைடோ விளையாட்டுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்கின்றன. பல்வேறு நிறங்களில் இது கிடைப்பது தனிச் சிறப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x