Last Updated : 02 Feb, 2018 11:18 AM

 

Published : 02 Feb 2018 11:18 AM
Last Updated : 02 Feb 2018 11:18 AM

பிரேக்-அப் பாடம்: பேசும் பொய்கள் உண்மையல்ல!

ப்பவும் பாய் ஃபிரெண்ட் மட்டுமே பொய் சொல்வார் என்று நினைப்பதெல்லாம் தவறு. கேர்ள் ஃபிரெண்ட்களும் நிறைய பொய் சொல்வார்கள். இதில் ஆண்- பெண் பேதம் எல்லாம் கிடையாது. பொய் சொல்லும் விஷயங்களில் மட்டுமே வித்தியாசம் இருக்கும். கேர்ள் ஃபிரெண்டுகள் சொல்லும் பொய்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தத்தைத் அறிந்துகொள்வது அவசியம். கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் அதிகமாகச் சொல்லும் சில பொய்கள் இவை:

பொய்: எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

அர்த்தம்: உங்கள் கேர்ள் ஃபிரெண்டு இப்படிச் சொன்னால் நீங்கள் உஷாராகிவிட வேண்டும். உதாரணமாக, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல உத்தேசித்திருப்பதைச் சொன்னால், அப்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் சொல்வார்கள். ஆனால், சென்று வந்தபிறகு, “என்னைவிட உன் நண்பர்கள்தான் உனக்கு முக்கியம்” என்று குத்திக் காட்டுவார்கள். அதனால், உங்கள் கேர்ள் ஃபிரெண்டு உண்மையாகவே பிரச்சினை இல்லை என்று சொல்கிறாரா என்பதை உறுதிப்படுத்தவும் சாமர்த்தியம் தேவை. அது உங்களுக்கு இருக்கிறதா என்பதில்தான் விஷயம் அடங்கியிருக்கிறது.

பொய்: சத்தியமா, கோபப்பட மாட்டேன்.

அர்த்தம்: ஆண்களிடமிருந்து உண்மையை வரவழைக்க விரும்பினால், இந்தப் பொய்யைச் சொன்னால் போதும். உண்மையில், அவர் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் உண்மையைச் சொன்னாலும் பிரச்சினைதான். பொய் சொன்னாலும் பிரச்சினைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனால், கோபத்தைச் சமாளிப்பதைப் பற்றி மட்டும் நீங்கள் யோசித்தால் போதும்.

பொய்: உன் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை.

அர்த்தம்: ஒரு வேளை உங்கள் கேர்ள் ஃபிரெண்டு இப்படிச் சொன்னால், உங்களுடைய ஃ பேஸ்புக் ‘ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை’ ‘சிங்கிள்’ என இருப்பதிலிருந்து ‘கமிட்டட்’ என மாற்ற வேண்டியது அவசியம் எனப் புரிந்துகொள்ளுங்கள். ஸ்டேட்டஸ் மாறாவிட்டால், உங்கள் ரிலேஷேன்ஷிப்கூடக் கேள்விக்குள்ளாகலாம்.

‘என்னுடைய ஒரு போட்டோகூட அவனுடைய டைம்லைனில் இல்லை. ரிலேஷன்ஷிப் ரிக்வஸ்ட் கொடுத்தும்கூட இன்னும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், அவனுக்கு என்னைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை என்றுதான் அர்த்தம்’ என உங்கள் கேர்ள் ஃபிரெண்டு யோசித்துக்கொண்டிருக்கலாம். அதனால், நிஜத்தில் மட்டுமல்ல; ஃபேஸ்புக்கிலும் உங்கள் கேர்ள் ஃபிரெண்டைப் பின்தொடர்வது அவசியம் பாஸ்.

பொய்: உன் சம்பளத்தைப் பற்றி அக்கறையில்லை.

அர்த்தம்: இது சத்தியமாகப் பொய்தான். பெயருக்குச் சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்லை. உங்கள் கேர்ள் ஃபிரெண்டுக்கு அடிக்கடி பரிசு கொடுக்க நீங்கள் நல்ல சம்பளம் வாங்க வேண்டும். அதை அவர்கள் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் பரிசே கொடுக்காவிட்டால், அவர்மீது உங்களுக்கு அன்பு இல்லை என்று உங்கள் கேர்ள் ஃபிரெண்டு நினைக்க வாய்ப்புகள் அதிகம்.

பொய்: நான் உன்னை மன்னித்து விடுகிறேன்.

அர்த்தம்: உங்கள் கேர்ள் ஃபிரெண்டு இப்படிச் சொன்னால், அதை நம்பினால் நீங்கள் ஏமாளி என்று அர்த்தம். அவர் மன்னித்துவிட்டதாகச் சொன்ன விஷயம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எரிமலையாக வெடிக்கலாம் என்று நீங்கள் நினைக்கா விட்டால், உங்களைச் சொல்லி ஒரு குற்றமும் இல்லை.

பொய்: உன் நண்பர்கள் வந்தால் பிரச்சினையில்லைப்பா.

அர்த்தம்: பாய் ஃபிரெண்ட் தன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை எந்த கேர்ள் ஃபிரெண்டும் நிச்சயம் விரும்ப மாட்டார். எனவே, அவர் இருக்கும்போது, உங்கள் நண்பர்கள் உடன் வந்தால், பிரச்சினை உங்களுக்குத்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x