Published : 29 Jan 2018 12:04 PM
Last Updated : 29 Jan 2018 12:04 PM

ஒரு நிறுவனம் பல தொழில்கள்

நூறாண்டுகளை கடந்த நிறுவனம் என்றால் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனைக்குக் காரணம் அந்த நிறுவனங்கள் தங்களை காலத்துக்கு ஏற்ப தக்கவைத்துக் கொண்டதால்தான். தவிர காலத்துக்கு ஏற்ப தொழில்களை மாற்றிக் கொள்வதும், விரிவு செய்து வருவதும்தான் நிலைத்து நிற்கக் காரணம். புதிதாக ஒரு தொழிலில் இறங்கும்போது அதற்கான துணைத் தொழில்களை செய்ய ஆளே இல்லாத நிலையில் அந்த துணைத் தொழிலையும் சேர்த்து செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்படித்தான் இந்த நிறுவனத்தின் கீழ் பல தொழில்களும், பிராண்டுகளும் உருவாகியுள்ளன. அந்த வகையில் நூறாண்டுகளைக் கடந்த பல நிறுவனங்கள் சர்வதேச அளவில் பல தொழில்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்கள் குறித்த பார்வை.
 

edisonjpgதாமஸ் ஆல்வா எடிசன்

ஜி இ - 1878

நிறுவனர்: தாமஸ் ஆல்வா எடிசன்

முதன் முதலில் மின் விளக்குகள் உற்பத்தியில் தொடங்கியது. இப்போது 180 நாடுகளில் ஜிஇ நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. முதன் முதல் மின் மாற்றி உள்ளிட்டவற்றையும் கண்டுபிடித்த நிறுவனம். எட்டு துறைகளில் பல துணை நிறுவனங்களை வைத்துள்ளது.

சந்தை மதிப்பு: 261.2 பில்லியன் டாலர்

பணியாளர்கள்: 2,95,000

ஈடுபடும் தொழில்கள்

முதலீடு, அணுசக்தி, மின் விளக்குகள், டிரான்ஸ்பார்மர், மின் உற்பத்தி, போக்குவரத்து, விண்வெளி ஆராய்ச்சி, ஜெட் என்ஜின், ஹெலிகாப்பட்ர் என்ஜின், எக்ஸ் ரே கருவிகள், புராடக்ட் சொல்யூஷன், மருத்துக் கருவிகள், டிஜிட்டல், கச்சா எண்ணெய், எரிவாயு.

 

 

யுனிலீவர் - 1880

unileverjpgவில்லியம் ஹெஸ்கெத் லீவர்right

நிறுவனர் : வில்லியம் ஹெஸ்கெத் லீவர்

வில்லியம் தனது சகோதரருடன் இணைந்து முதன் முதலில் சன் லைட் என்கிற குளியல் சோப்பை தயாரித்தார். இப்போது நிறுவனம் 400 பிராண்டுகளில் நுகர்பொருட்களை விற்பனை செய்கிறது. இதில் 13 பிராண்டுகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையாகிறது. தினசரி 250 கோடி மக்கள் யுனிலீவர் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

சந்தை மதிப்பு: 149.9 பில்லியன் டாலர்

பணியாளர்கள்: 1,69,000

ஈடுபடும் தொழில்கள்

உணவுப் பொருட்கள், குளிர் பானம், தனிநபர் ஆரோக்கியம், ஐஸ் கிரீம், டீ, ஹோம் கேர், வாட்டர் பியூரிபையர்

சில பிராண்டுகள்

ஆக்ஸ், டவ், லைஃபாய், லிப்டன், லக்ஸ், மேக்னம், ரெக்ஸோனா, சன் சில்க், சர்ப் எக்ஸெல், பெப்ஸோடெண்ட், பாண்ட்ஸ், ப்ரூ. பேர் அல்ட் லவ்லி, பியூர் இட், ரின், கிளீனிக் ப்ளஸ்,

 

galebjpgகாலெப் பிராதம்

பெப்சிகோ - 1965

நிறுவனர் : காலெப் பிராதம்

1890-ம் ஆண்டுகளில் முதன் முதலில் குளிர்பான தயாரிப்பை காலெப் தொடங்கினார். பின்னர் 1991-ம் ஆண்டு பிளிண்டோ லே நிறுவனத்துடன் இணைந்த பின்னர் பெப்சிகோ பிராண்டாக உருவானது. உற்பத்தி, மார்கெட்டிங், விநியோகம் என மூன்றிலும் ஈடுபடுகிறது.

சந்தை மதிப்பு: 159.4 பில்லியன் டாலர்

பணியாளர்கள்: 2,64,000

பிராண்டுகள்

22 பிராண்டுகளை வைத்துள்ளது. பெப்சிகோ, 7 அப், லேஸ், டிராபிகானா, க்விக்கர், அக்வாபினா, ஸ்லைஸ்.

 

PandGjpgவில்லியன் பிராக்டர் , ஜேம்ப் கேம்பல்right

பிராக்டர் அண்ட் கேம்பிள் - 1837

நிறுவனர் : வில்லியன் பிராக்டர் , ஜேம்ப் கேம்பல்

நுகர்பொருள் துறை நிறுவனம். குழந்தை பராமரிப்பு, அழகு பொருட்கள், ஹவுஸ் ஹோல்ட், பிரிவில் பல பிராண்டுகளை வைத்துள்ளது. ஆரம்பத்தில் சோப் மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பில் நண்பர்கள் ஈடுபட்டனர். 1859-ம் ஆண்டிலேயே நிறுவனம் 10 லட்சம் டாலர் வருமானம் ஈட்டியது.

சந்தை மதிப்பு : 228.1 பில்லியன் டாலர்

பணியாளர்கள்: 1,05,000

பிராண்டுகள்

ஏரியல், டியூராசெல், கில்லட், ஓரல் பி, ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ், பாம்பர்ஸ், பாண்டீன், விக்ஸ், விஸ்பர்.

 

tatajpgஜாம்ஜெட் ஜி டாடா

டாடா -1868

தொடக்கம்: ஜாம்ஜெட் ஜி டாடா

தொழில்நுட்பம், மின்சாரம், கார், ஸ்டீல், ரசாயனம், ஆபரணங்கள், நுகர்வோர் பொருட்கள் என பல துறைகளில் உள்ளது. 30க்கு மேற்பட்ட பட்டியலிடபட்ட நிறுவனங்கள், 100க்கு மேற்பட்ட நிறுவனங்களுடன் இயங்குகிறது.

சந்தை மதிப்பு: 145 பில்லியன் டாலர்

பணியாளர்கள்: 6,95,000

பிராண்டுகள்

டைட்டன், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், குளிர்பானங்கள், டிசிஎஸ், உப்பு, தாஜ் ஹோட்டல், விஸ்தாரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x