Published : 29 Jan 2018 12:10 PM
Last Updated : 29 Jan 2018 12:10 PM

பொருள் புதுசு: எலெக்ட்ரிக் ஸ்கேட்டிங்

அனைத்து சாலைகளிலும் அதிவேகமாகச் செல்லும் ஸ்கேட்டிங் சாதனம். பேட்டரி மூலம் இயங்குகிறது. சாகச விளையாட்டுக்கு மட்டுமல்லாமல் கடைகள், அலுவலகங்களுக்கு செல்வதற்கும் ஏற்றது.

 

வளைவு எல்இடி

அனைத்து கால சூழலுக்கும் ஏற்ற எல்இடி. 1 லட்சம் அடி உயரத்திலும் மைனல் 76 டிகிரி உறைநிலையிலும் கூட ஒளிரும். ஸ்வீடனைச் சேர்ந்த பிளைட் என்கிற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 

கழற்றும் கைப்பிடி

கை பிடி இல்லாத குடுவைகள், பாட்டில்களை கையாள உதவும் கைப் பிடி. ஸ்டீல், கண்ணாடி என அனைத்து குடுவைகளுக்கும் பொருத்தலாம். கழட்டி மாட்டும் ஸ்டிப் வகையில் உள்ளது.

 

செல்ப் பார்க்கிங் செருப்பு

காலணிகளை வீட்டுக்கு வெளியே விட்டுச் செல்வதுதான் எல்லோருக்கும் வழக்கம். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் இப்படி விட்டுச் செல்லும்போது திரும்ப தேடுவது கடினம். அதற்கு தீர்வைக் கண்டுள்ளது நிசான் நிறுவனம். தானாகவே செருப்புகள் ஜோடி சேர்ந்து கொள்ளும் வகையில் செல்ப் பார்கிங் செருப்புகளை உருவாக்கியுள்ளது. தனது கார்களில் பயன்படுத்தும் செல்ப் பார்க்கிங் தொழில்நுட்பமான `ப்ரோ பைலட் பார்க்` ProPILOT Park தொழில்நுட்பத்தை இதில் முயற்சித்துள்ளது. மேலும் ஹோட்டலிலும் செல்ப் பார்க்கிங் நுட்பத்தை சோதிக்கும் முயற்சியிலும் நிசான் ஈடுபட்டுள்ளது.

 

நீந்தும் ரோபோ

ஊர்ந்தும், நீந்தியும் செல்லும் மிகச் சிறிய ரோபோ தொழில்நுட்பத்தை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காந்த துகள்கள் மற்றும் ரப்பரை மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை மருத்துவ ரீதியாக பயன்படுத்த உள்ளனர். உடல் உறுப்புகள், தசைகள், ரத்தக்குழாய், சிறுநீர் குழாய்களுக்குள் எளிதாக நீந்தியும், ஊர்ந்தும் செல்லும் வகையில் மிக மெலிதாகவும், மென்மையாகவும் இருக்கும். மருந்துகளை மனித உடலுக்கு செலுத்திவிட்டு இந்த ரோபோ திரும்ப வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x