Last Updated : 21 Jul, 2014 05:56 PM

 

Published : 21 Jul 2014 05:56 PM
Last Updated : 21 Jul 2014 05:56 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகைகள்

மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி படிப்பதற்காக மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் வழங்குகிறது.

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் ஒரு பிரிவாக மாற்றுத்திறனாளிகள் விவகாரத்துறை உள்ளது. அதன் கீழ் தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செயல்படுகிறது. அதன் வழியாக கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

டிரஸ்ட் நிதி,தேசிய நிதி என்று இரண்டு முறையில் இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

டிரஸ்ட் நிதியின் கீழான உயர்கல்வி உதவித்தொகை:

இந்த உதவித்தொகை ஒரு கல்வியாண்டில் 2500 எனும் எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது.பட்டப்படிப்புகளுக்கும் பட்டமேற்படிப்பு அளவிலான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கும் இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இதில் 30 சதவீத கல்வி உதவித்தொகைகள் பெண் மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒருவேளை போதுமான அளவு பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் அவை ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றித் தரப்படும்.

2014-15 கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகைகளை பெற இந்த ஆண்டில் எப்போதும் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.இதற்காக ஆன்லைனில் www.nhfdc.nic.in என்ற இணையத் தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

திரும்பத் தரப்படாத கல்வி கட்டணங்களை கல்வி நிறுவனங்களில் கட்டியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் கட்டணங்களின் அளவுக்கு மட்டுமான தொகையை அரசு திரும்ப வழங்கும்.

பராமரிப்பு அலவன்ஸாக தொழிமுறை பட்டப்படிப்புகளுக்கு பத்து மாதங்களுக்கு மாதம் 2500 ரூபாயும் பட்டப்படிப்புக்கு பிந்திய தொழில்முறை படிப்புகளுக்கு மாதம் 3000 ரூபாயும் தரப்படும். புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருள்களுக்க்காக பட்டப்படிப்பு மாணவருக்கு வருடம் 6 ஆயிரமும் பட்ட மேற்படிப்பு மாணவருக்கு ஆண்டுக்கு 10 ஆயிரமும் தரப்படும்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்க ஒரு முறை மட்டும் நிதி உதவி வழங்கப்படும்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் மூன்று லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த கல்வி உதவித்தொகையை பெறுபவர்கள் மற்ற எந்த கல்வி உதவித்தொகையையும் பெறக்கூடாது.

தேசிய நிதியின் கீழான கல்வி உதவித்தொகை

இதன் கீழ் 500 பேருக்கு தொழிற்முறை மற்றும் தொழிற்நுட்ப உயர்கல்விப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும்.இதற்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 1.7.2014 முதல் 31.08.2014 வரைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பட்டப்படிப்பு மற்றும் அதற்கும் மேற்பட்ட படிப்புகளை விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் மற்றவர்களுக்கு மாதம் 700 ரூபாயும் வழங்கப்படும்.பட்டய படிப்பு ,சான்றிதழ் படிப்புகளை படிப்பவர்கள் விடுதி மாணவர்களாக இருந்தால் 700 ரூபாயும் மற்றவர்களுக்கு 400 ரூபாயும் வழங்கப்படும்.

ஒரு வருடத்துக்கான கோர்ஸ் கட்டணம் 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.பார்க்கும் திறன் அற்ற,மற்றும் கேட்கும் திறன் அற்ற மாணவர்களுக்கு அவர்களுக்கான எடிட்டிங் சாப்ட்வேருடன் கூடிய கணிணி வாங்க நிதி உதவி செய்யப்படும்.செரிபரல் பல்ஸி குறைபாடு உள்ள மாணவர்களுக்கு தேவையான சாப்ட்வேர் பெற உதவி செய்யப்படும்.

இந்த கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 1.80 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த உதவித்தொகையை பெறுபவர்கள் வேறு எந்த கல்வி உதவித்தொகையையும் பெற்க்கூடாது.

இந்த உதவித்தொகைகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பிப்பது மட்டுமே போதாது.அந்த விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் தலைவரிடம் உரிய முறையில் அதன்மீது சான்று பெற்று உரிய ஆவணங்களுடன் National Handicapped Finance and Development Corporation

(NHFDC), Red Cross Bhawan, Sector-12, Faridabad-121007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள:nhfdc97@ gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x