Published : 11 Dec 2017 11:58 AM
Last Updated : 11 Dec 2017 11:58 AM

டாடா-வின் பிரம்மாண்ட தள்ளுபடி சலுகை

டா

டா நிறுவனம் தனது தயாரிப்புகளுக்கு பிரம்மாண்டமான தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளது.

ஒரு ரூபாய் செலுத்தி உங்களுக்கு விருப்பமான டாடா பிராண்ட் காரை ஓட்டிச் செல்லும் வாய்ப்பை இந்நிறுவனம் அளித்துள்ளது. டிசம்பர் மாத சலுகையாக இந்த மாபெரும் தள்ளுபடி சலுகையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி குறைந்தபட்சம் ரூ.28,000 லிருந்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை கார்களுக்கு தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் காரை வாங்குவதற்கு வசதியாக சுலப தவணை திட்டங்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெக்ஸா காருக்கு அதன் விலையில் ரூ.78 ஆயிரமும், டியாகோ காருக்கு ரூ.26 ஆயிரமும், டிகோருக்கு ரூ.32 ஆயிரமும், ஜெஸ்ட் காருக்கு ரூ.68 ஆயிரமும், ஸ்டோர்ம் காருக்கு ரூ.1 லட்சமும் தள்ளுபடி சலுகை அளிப்பதாக டாடா அறிவித்துள்ளது. பழைய கார்களை மாற்றிக் கொள்வோருக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கூடுதலாக அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x