Last Updated : 30 Dec, 2017 11:07 AM

 

Published : 30 Dec 2017 11:07 AM
Last Updated : 30 Dec 2017 11:07 AM

சுவரொட்டி அலங்காரங்கள்

ரப் பலகைகள், வண்ண ஓவியங்கள் கொண்டு வீட்டை அலங்கரிப்பது போல இப்போது வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்துவருகிறது. வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாகச் சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம். அந்தச் சுவர் அலங்காரத்தை எளிமையாகவும், அசத்தலாகவும் செய்வதற்கு உதவுகின்றன சுவரொட்டிகள்.

சுவரொட்டிகளில் இப்போது பலவகைகள் கிடைக்கின்றன. அழகு, கலைநயம், புதுமை, தனிநபர் ரசனை, பட்ஜெட் என எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, நமக்குப் பொருத்தமான சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். சுவரொட்டிகளால் வீட்டுக்கு நவீனத் தோற்றத்தை எளிமையாக வழங்க முடியும்.

shutterstock_140206264right

அதுவும், தற்போது வீடுகளில் இந்தச் சுவரொட்டிகள் பலவகையில் பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்துடன் வீட்டில் வசிப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதிலும் இந்தச் சுவரொட்டிகள் பெரிய பங்குவகிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்திலும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். அந்தக் கதையை சுவரொட்டிகள் வழியாக நவீன மொழியில் சொல்வதும் இப்போது புதிய பாணியாக இருக்கிறது.

உங்களுடைய வீட்டின் தன்மைக்கேற்றபடி இந்தச் சுவரொட்டி வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ‘வால் பேப்பர்’(Wall paper), ‘வால் மியூரல்’(Wall Mural), ‘வால் டாட்டூ’ (Wall Tattoo) என மூன்று வகையாக இதைப் பிரித்திருக்கிறது ‘ஐடேக்கோர்வாலா’ இணையதளம். இதில் ரசனை, பட்ஜெட், அறையைப் பொருத்து இந்தச் சுவரொட்டி வகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வால் பேப்பர் என்னும் சுவரொட்டிகளிலேயே பல வகைகள் இருக்கின்றன. “ஃபேப்ரிக், ‘வினைல்’, ‘ஃபோம்’, ‘நான்-ஓவன்’ என நான்கு முக்கியமான சுவரொட்டிகள் இருக்கின்றன. இதில் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ‘வினைல்’ வால் பேப்பர் ஏற்றது. ஏனென்றால் இந்த வகை ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைக்கும். பத்துக்குப் பத்து சதுர அடிக்கு இந்த வினைல் வால்பேப்பரைப் பயன்படுத்தினால் சுமார் 5000 ரூபாய் வரை செலவாகும். அதேமாதிரி, ரசனைக்கும் வீட்டின் வடிவமைப்புக்கும் ஏற்ற மாதிரி நான்-ஓவன், ஃபேப்ரிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் சாதாரண காகித சுவரொட்டிகளைப் பயன்படுத்தலாம். இது ஓராண்டு வரை உழைக்கும். பட்ஜெட்டும் குறைவாக இருக்கும். இந்தக் காகித சுவரொட்டிகளிலும் பலவகையான டிசைன்கள் இருக்கின்றன.

shutterstock_522325861

3டி வடிவமைப்பில் வீட்டுச் சுவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் வீட்டுச் சுவரை வடிவமைக்க விரும்புபவர்களுக்கு ‘வால் மியூரல்’ வடிவமைப்புகள் உதவியாக இருக்கும்.

நவீனத்தை விரும்பும் இளைஞர்களுக்கும், கார்ட்டூன்களை விரும்பும் குழந்தைகளுக்கும் வால் டேட்டூக்கள் சரியான தேர்வாக இருக்கும். சுவரொட்டிகளின் தன்மையைப் பொருத்து விலை மாறுபடும்.

டாட்டூக்களை வடிவமைக்க 1,000 ரூபாயில் இருந்தும், 3டி வால் பேப்பர்களை வடிவமைக்க 3,000 ரூபாயில் இருந்தும் செலவாகும். இந்த 3டி வால்பேப்பர்களில் எந்த ஓவியத்தையும், கருப்பொருளையும் உருவாக்க முடியும்.

உதாரணத்துக்குக் காட்டைக் கருப்பொருளாக வைத்து 3டி வால்பேப்பரில் வீட்டு உள்அலங்காரத்தையும் எளிமையாகச் செய்யமுடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x