Published : 20 Nov 2017 09:57 AM
Last Updated : 20 Nov 2017 09:57 AM

வெற்றி மொழி: ஆலன் வாட்ஸ்

1915-ம் ஆண்டு முதல் 1973-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆலன் வாட்ஸ் நன்கு அறியப்பட்ட ஆங்கில தத்துவவாதி, எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். கிழக்கத்திய தத்துவத்தின் பிரபலமானவராக அறியப்படுகிறார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது பள்ளி பருவத்திலேயே பெளத்தத்தில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். பதினான்கு வயதிலேயே எழுதத் தொடங்கியவர், இருபத்தைந்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். இதில் பல ஜென், கிறித்துவம், உளவியல், செயல்முறை தத்துவம், இயற்கை வரலாறு, கிழக்கு மற்றும் மேற்கத்திய மதங்கள் ஆகியவை குறித்த படைப்புகள். மேலும் இவரது ஆக்கங்கள் ஆடியோ மற்றும் வீடியோ படைப்புகளாகவும் வெளிவந்துள்ளன.

# கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியன உண்மையான மாயைகளாக இருக்கின்றன என்பதை நான் உணர்ந்துள்ளேன்.

# உங்களை வரையறுக்க முயற்சிப்பது என்பது உங்களது பற்களை கடிக்க முயற்சிப்பதைப் போன்றது.

# வலிக்கான அதிக உணர்ச்சிப்பெருக்குடன் இல்லாமல், மகிழ்ச்சிக்கான அதிக உணர்ச்சிப்பெருக்குடன் நம்மால் இருக்க முடியாது.

# இப்போது வாழும் வாழ்க்கைக்கான திறனை கொண்டிருக்காதவர்களால், எதிர்காலத்திற்கான சரியான திட்டங்களை உருவாக்க முடியாது.

# நீங்கள் உண்மையில் உணராத ஒரு அன்பைப்பற்றி ஒருபோதும் பாசாங்கு செய்யாதீர்கள்.

# நாம் என்ன செய்கிறோம் மற்றும் நமக்கு என்ன நடக்கிறது என்பதற்கான வேறுபாட்டினை நாம் நமது அனுபவத்தில் அடையாளம் காண்கிறோம்.

# நம்மிடம் கற்பனைத்திறன் இல்லாததே, நம்மிடம் வறுமை இருப்பதற்கான காரணம்.

# உங்களுக்கானது ஒரு நிலையில் எது வேற்றுமையாக உள்ளதோ, அது மற்றொரு நிலையில் ஒற்றுமையானதாக இருக்கும்.

# கடவுள் எதை வேடிக்கைக்காகப் படைத்தாரோ, அதை தீவிரமானதாக கையாளுவதால் மட்டுமே மனிதன் துன்பப்படுகிறான்.

# நீங்கள் இங்கு இப்பொழுது என்ன செய்துக்கொண்டிக்கிறீர்களோ அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்வதே வாழ்க்கையின் உண்மையான ரகசியம்.

# நமது கண்களின் வழியாக, இந்த பிரபஞ்சம் தன்னை உணர்கிறது.

# பிரசவ அறைக்கும் சுடுகாட்டிற்கும் இடையே என்ன நடக்கிறது என்பதே நான்.

# அனைத்து ஒளிகளுக்குமான உற்பத்தி ஸ்தானம் கண்களிலேயே உள்ளது.

# மோசமான வழியில் செலவிடப்படும் ஒரு நீண்ட ஆயுட்காலத்தைவிட, முழுமையாக நீங்கள் செய்யவிரும்பியதை கொண்ட ஒரு குறைவான ஆயுட்காலம் சிறந்தது.

# சந்தேகத்திற்கிடமான உண்மைகளுக்கு மட்டுமே பாதுகாப்பு தேவைப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x