Published : 06 Mar 2018 11:10 AM
Last Updated : 06 Mar 2018 11:10 AM

வரலாறு தந்த வார்த்தை 20: லாபத்தின் நிறம் கறுப்பு!

‘க

றுப்பு உழைப்போட வண்ணம். என் சால்ல வந்து பாரு. அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும்’ என்று அடிக்குரலில் கெத்தாக ரஜினி பேசும் வசனம்தான் இப்போதைய வைரல்!

‘டீசர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, படம் எப்படி இருக்கும்? ‘கபாலி’ மாதிரியே இருக்குமா?’ என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இன்னும் கொஞ்ச காலத்தில் பதில் தெரிந்துவிடும். ஒரு வேளை இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வசூலை வாரிக் குவித்தால், ‘தி ஃபிலிம் இஸ் இன் தி பிளாக்’ என்று விமர்சனங்கள் வரும்.

‘படம் ரொம்பக் கறுப்பா, பயங்கரமா இருக்குமோ?’ என்று பதற வேண்டாம், இது வேற. கறுப்பு உழைப்போட வண்ணம் என்பதெல்லாம் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் வேண்டுமானால் எடுபடலாம். ஆனால் ஆங்கிலத்தில், குறிப்பாக அமெரிக்கப் பேச்சு வழக்கில், கறுப்பு என்பது லாபத்தின் நிறம்.

அந்தக் காலத்தில் அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், தங்களின் லாப நட்டக் கணக்குகளைச் சொல்லாமல் சொல்லிப் புரியவைக்கும் வகையில், தனித்துவமான நடைமுறை ஒன்றைப் பின்பற்றிவந்தன. அதாவது, ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும், அந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை எல்லாம் முடிப்பார்கள். அப்படி முடிக்கும்போது, அந்த நிறுவனம் செய்திருக்கும் செலவுகளைவிட அதிக அளவில் லாபம் சம்பாதித்திருந்தால், கறுப்பு மையாலும், லாபத்தைவிட செலவுகள் அதிகமாகி இருந்தால், அதைச் சிவப்பு மையாலும் குறிப்பிடுவார்கள்.

அந்த நிறுவனத்திடம் ‘இந்த வருஷம் உங்களுக்கு எப்படி?’ என்று யாராவது கேட்டால், ‘ஓ… நாங்களா… வீ ஆர் ‘இன் தி பிளாக்’ (in the black)’ என்பார்கள். ஆகவே, இனி, எந்த வாக்கியத்திலாவது ‘in the black’ அல்லது ‘in the red’ என்ற சொற்றொடர்களைக் கடந்து வந்தால், அவை முறையே லாபம் அல்லது நஷ்டத்தைக் குறிக்கிறது என்று பொருள்!

மற்றபடி, ரசிகர்களைத் திருப்தியடைய வைக்க வேண்டிய பொறுப்பு ‘மேன் இன் பிளாக்’ குக்கு இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x