2028-ல் புவனேஷ்வரில் நடைபெறுகிறது உலக உள்​ளரங்க தடகள விளையாட்டு

2028-ல் புவனேஷ்வரில் நடைபெறுகிறது உலக உள்​ளரங்க தடகள விளையாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: போலந்​தின் டோருன் நகரில் நேற்று உலக தடகள கவுன்​சில் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், உலக உள்ளரங்க தடகள சாம்​பியன்​ஷிப் போட்​டியை நடத்​தும் உரிமை இந்​தி​யா​வுக்கு வழங்​கப்​பட்​டது. இதன்​படி, இந்​தப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெறவுள்ளது.

2025-ம் ஆண்​டுக்​கான உலக உள்​ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்​டிகள் போலந்​தில் இன்று (20-ம் தேதி) தொடங்குகிறது. இந்த சூழ்​நிலை​யில் உலக தடகள கவுன்சில் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. உலக தடகள அமைப்​பின் துணைத் தலை​வர் அடில் சுமரி வாலா கூறும்​போது, “இந்​தியா 2028-ம் ஆண்​டுக்​கான உலக உள்​ளரங்க தடகள சாம்​பியன்​ஷிப் போட்​டியை நடத்​தும் வாய்ப்​பைப் பெற்​றுள்​ளது” என்​றார்.

இந்​திய தடகள சம்​மேளனம், இந்த ஆண்​டின் தொடக்கத்தில் உலக தடகள உள்​ளரங்க சாம்​பியன்​ஷிப் போட்​டியை நடத்​து​வதற்​கான தனது விருப்​பத்தை வெளிப்​படுத்​தி​யிருந்​தது. இதனைத் தொடர்ந்​து, உலக தடகள அமைப்​பைச் சேர்ந்த இரு​வர் கொண்ட குழு, கடந்த ஜனவரி மாதம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதான வளாகத்​தில் அமைந்​துள்ள அதிநவீன உள்​ளரங்க வசதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்திருந்தது.

2028-ல் புவனேஷ்வரில் நடைபெறுகிறது உலக உள்​ளரங்க தடகள விளையாட்டு
கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in