மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் நடை​பெற உள்​ளது. இந்த தொடருக்​கான 20 பேர் கொண்ட இந்​திய மகளிர் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. கேப்​ட​னாக சலிமா டெட்டே தொடர்​கிறார்.

உலகக் கோப்பை தொடரில் இந்​திய மகளிர் அணி ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இதே பிரி​வில் சீனா, இங்​கிலாந்​து, தென் ஆப்பிரிக்கா அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் ஆகஸ்ட் 16-ல் சீனா​வுக்கு எதி​ராக மோதுகிறது.

இந்​திய அணி விவரம்: சவி​தா, பிச்சு தேவி ஹரி​பாம் (கோல் கீப்பர்கள்), இஷிகா சவுத்​ரி, சுசீலா சானு புக்​ரம்​பம், லால்​தன்ட்​லு​வாங்​கி, ஜோதி, ஷில்பி தபாஸ் (டிஃபென்​டர்​கள்), நிக்கி பிர​தான், சாக் ஷி ராணா, சுனெலிடா டோப்​போ, சலிமா டெட்டே (கேப்​டன்), நேஹா, தீபிகா சோரெங் (நடு​களம்), லால்​ரெம்​சி​யாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்​நீத் கவுர், தீபி​கா, இஷி​கா, பல்​ஜீத் கவுர், பியூட்டி டங்​டங்​ (முன்​களம்​).

மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி பிஎஃப் திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in