அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி பிஎஃப் திட்டம்

அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி பிஎஃப் திட்டம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமைப்பு சாரா ஊழியர்​கள், சுய​வேலை​வாய்ப்பு பெறு​பவர்​களுக்​கும் இனி வருங்​கால வைப்பு நிதித்​திட்​டத்​தில் (பிஎஃப்) பணம் பங்​களிப்​பு செய்​யும் வசதி விரை​வில் அமலுக்கு வரவுள்​ளது.

அமைப்பு சாரா தொழிலா​ளர்​கள், சுய​வேலை​வாய்ப்பு பெறு​பவர்​கள், கிக் தொழிலா​ளர்​கள், விலக்கு அளிக்​கப்​பட்ட நிறு​வனத்​தில் பணிபுரிபவர்​களுக்கு சமூகப் பாது​காப்பை வழங்​கும் நோக்​கில் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பு(இபிஎஃப்ஓ) புதி​தாக பிஎஃப் திட்​டத்​தைத் தயார் செய்து வரு​கிறது. புதிய திட்​டம் அமலுக்கு வரும்​போது இந்​தத் தொழிலா​ளர்​களும் பிஎஃப் திட்​டத்​தில் சேர்ந்து ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட பயன்​களைப் பெற முடி​யும்.

இந்​தத் திட்​டத்​தில் சேரும் தொழிலா​ளர்​களுக்கு பணம் பிடித்​தம் செய்​யப்​படு​வது தற்​போதைய இபிஎஃப்ஓ மாதிரியைப் பின்​பற்​றியே அமை​யும். இதில் சேரும் புதிய சந்​தா​தா​ரர்​கள் தினசரி அல்​லது ஆண்​டு​தோறும் நிதி பங்​களிப்​புச் செய்​யும் வசதி​யைப் பெறு​வர். இவர்​கள் சார்​பில் சேமிக்​கப்​படும் தொகைக்கு வட்டி மற்​றும் வரிச் சலுகைகளும் கிடைக்​கும். அதாவது, ஆண்​டுக்கு ரூ.2.5 லட்​சம் வரையி​லான பங்​களிப்​புக்​கும், அதற்​கான வட்​டிக்​கும் முழு​மை​யான வரி விலக்கு அளிக்​கப்​படும்.

அதே​போல் பிஎஃப்​-ல் சேர்க்​கப்​படும் பணத்​தைத் திரும்​பப் பெறும் முறை​யிலும் முக்​கிய மாற்​றங்​களைச் செய்ய இபிஎஃப்ஓ அமைப்பு திட்​ட​மிட்​டுள்​ளது. ஓய்​வு​பெறும் காலத்​தி​லும் சந்​தா​தா​ரர்​கள் தங்​கள் சேமிப்​புத் தொகையை இபிஎஃப்​ஓ-​விலேயே வைத்​துக் கொள்ள அனு​ம​திக்​கப்பட உள்​ளனர். இந்த வசதி ஏற்​க​னவே உள்ள சந்​தா​தா​ரர்​களுக்​கும் விரிவுபடுத்​தப்​படலாம் என்று தெரிய​வந்​துள்​ளது.

சுய​வேலை​வாய்ப்பு பெறு​வோர், அமைப்பு சாரா தொழிலா​ளர்​களுக்கு பிஎஃப் திட்​டத்​தில் சேர்க்க தகவல் தொழில்​நுட்​பக் கட்​டமைப்பு இன்​னும் உரு​வாக்​கப்​பட​வில்​லை. இது தொடர்​பான கட்​டமைப்பை உரு​வாக்க இபிஎஃப்ஓ அமைப்பு டெண்​டர் கோரி​யுள்​ளது. இந்​தப் புதிய திட்​டம் நடை​முறைக்கு வந்​தால், சாதாரண தொழில் செய்​பவர் கூட பிஎஃப் திட்​டத்​தில் பங்​களிப்பை மேற்​கொள்ள முடி​யும். இதன்​மூலம் அவர் தனது ஓய்​வுக்​காலத்​திற்​குதிட்​ட​மிட முடியும் என்று இபிஎஃப்ஓ மூத்த அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார். விரை​வில் இந்த பிஎஃப் திட்​டம் தயாரிக்​கப்​பட்டு அமலுக்கு வரும் என்று எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக அந்​த அதி​காரி மேலும்​ தெரிவித்​தார்​.

அமைப்பு சாரா ஊழியர்கள், சுயவேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் இனி பிஎஃப் திட்டம்
ஹைட்ரஜன் ரயிலை தொடங்கினார் மோடி: 75 நிலையங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in