

போபால்: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோல்வியைச் சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இதில் தென்கொரியாவுக்கு எதிரான ஆட்டம் மட்டுமே இந்திய அணிக்கு கடும் சவாலாக அமைந்தது. மற்றொரு அரையிறுதியில் ஜப்பான் அணி, சீனாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.