உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் சிறந்த இளம் வீரர் விருது வென்றவர்கள்!

உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் சிறந்த இளம் வீரர் விருது வென்றவர்கள்!
Updated on
1 min read

உலகின் முன்னணி கால்பந்து வீரர்கள் பலர் உலகக் கோப்பை அரங்கில் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர். அதே நேரத்தில், வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும் இந்த தொடர் உலகளாவிய ரசிகர்கள் முன் தங்களை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கி வந்திருக்கிறது.

எத்தனையோ இளம் வீரர்கள் உலகக் கோப்பையில் தங்கள் அணியின் வெற்றியில் பெரும்பங்கோ அல்லது உறுதுணை பங்கோ அளித்துள்ளனர். அவர்களை ஃபீபா அமைப்பு விருது கொடுத்து கவுரவித்து வருவதையும் பார்த்து வருகிறோம்.

2006-ம் ஆண்டு முதல், FIFA உலகக் கோப்பையில் 21 வயது அல்லது அதற்கு குறைவான சிறந்த வீரருக்கு “FIFA இளம் வீரர் விருது” வழங்கப்படுகிறது. போட்டி நடைபெறும் ஆண்டின் தொடக்கத்தில் 21 வயது அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள்.

முன்னதாக இந்த விருதை வென்றவர்களில் ஒருவர் பிரான்ஸ் வீரர் கைலியன் மபாப்பே. 2018 உலகக்கோப்பையில் 19 வயதான அவர், சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்காக 4 கோல்கள் அடித்தார். மேலும், 1958ஆம் ஆண்டு பீலேவுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கோல் அடித்த முதல் டீனேஜர் என்ற சாதனையையும் படைத்தார்.

2026 கால்பந்து உலகக்கோப்பைத்தொடர் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த முறை, முந்தைய 32 அணிகள் என்பது விரிவுபடுத்தப்பட்டு, 48 அணிகள் பங்கேற்கின்றன.

FIFA உலகக்கோப்பை இளம் வீரர் விருது வென்றவர்களின் முழுப் பட்டியல்:

என்சோ ஃபெர்னாண்டஸ் வயது: 21 (அர்ஜென்டினா) – 2022

7 போட்டிகளில் 1 கோல்

அர்ஜென்டினா உலகக்கோப்பையை வெல்ல உதவினார்

கைலியன் மபாப்பே, வயது: 19 (பிரான்ஸ்) – 2018

7 போட்டிகளில் 4 கோல்கள்

பிரான்ஸ் உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்

பால் போக்பா, வயது: 21 (பிரான்ஸ்) – 2014

5 போட்டிகளில் 1 கோல் மற்றும் 1 கோல் வாய்ப்பை உருவாக்க உதவினார்.

பிரான்ஸ் அணி காலிறுதிவரை முன்னேற உதவினார்

தாமஸ் முல்லர், வயது: 20 (ஜெர்மனி) – 2010

ஆறு போட்டிகளில் 5 கோல்கள் மற்றும் 3 கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்

ஜெர்மனி அணி மூன்றாவது இடம் பெற உதவினார்

லுகாச் பொடோல்ஸ்கி, வயது: 21 (ஜெர்மனி) – 2006

ஏழு போட்டிகளில் 3 கோல்கள்

ஜெர்மனி அணி மூன்றாவது இடம் பெற உதவினார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்களில் சிறந்த இளம் வீரர் விருது வென்றவர்கள்!
அழுத்தமான சூழ்நிலையில் அசத்துவது எப்படி? - மனம் திறக்கும் விராட் கோலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in