

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை அனுபவம் இல்லாத ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்தார். அந்த சீசனில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் இறுதி ஓவர்களில் தோல்வியை சந்தித்து இருந்தது.
இது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை வெகுவாக பாதித்தது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட ரியான் பராக் முயற்சி செய்யக்கூடும். ரவீந்திர ஜடேஜா, டொனோவன் பெரைரா ஆகியோரது வருகை அணிக்கு வலு சேர்க்கக்கூடும்.
பலம்: அதிரடியான தொடக்க ஜோடி (ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி) வலுவான ஆல்ரவுண்டர்கள் (ஜடேஜா, ஷனகா, ரியான் பராக்) இளம் வீரர்கள் + அச்சமற்ற பேட்டிங் அணுகுமுறை
பலவீனம்: புதிய கேப்டனின் (ரியான் பராக்) நிரூபிக்கப்படாத தலைமைத்துவம். சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சிஎஸ்கேவுக்கு கொடுத்தது. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் சாம் கரண் விலகல். நடுவரிசை பேட்டிங்கில் தொடர்ச்சியான செயல் திறன் இல்லாதது. இறுதிக்கட்ட ஓவர் பந்துவீச்சு. அதிக அளவில் இளம் வீரர்களின் திறனை மட்டுமே சார்ந்து இருப்பது.
அணி விவரம்:
பேட்ஸ்மேன்கள்: ரியான் பராக் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, அமன் ராவ், ஷுபம் துபே, ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரவி சிங்.
ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, டோனோவன் பெரைரா, தசன் ஷனகா.
பந்துவீச்சாளர்கள்: ஜோப்ரா ஆர்ச்சர், பிரிஜேஷ் சர்மா, நந்த்ரே பர்கர், துஷார் தேஷ்பாண்டே, ஆடம் மில்னே, க்வெனா மபாகா, சுஷாந்த் மிஷ்ரா, விக்னேஷ் புதூர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, குல்தீப் சென், யாஷ் ராஜ் பூன்ஜா, யுத்விர் சிங்.
செயல் திறன்
சாம்பியன் பட்டம்: 1 (2008)
மொத்த ஆட்டங்கள்: 222
வெற்றி: 109
தோல்வி: 108
டை/முடிவு இல்லாதது: 5
வெற்றி சதவிகிதம்: 49.1%