இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வயது வீரர்: வைபவ் சூர்யவன்ஷி சாதனை

வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி

Updated on
1 min read

மான்செஸ்டர்: இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் டி20 தொடரில் இப்போது பலப்பரீட்சை மேற்கொண்டுள்ளன. இதில் முதல் ஆட்டம் மழையால் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது ஆட்டம் இன்று (சனிக்கிழமை) மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான இளவயது வீரர் (15 ஆண்டுகள் 99 நாட்கள்) என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு இந்தியா சார்பில் சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட்) 16 ஆண்டுகள் 205 நாட்களில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமாகி இருந்தார். அந்த சாதனையை இப்போது வைபவ் சூர்யவன்ஷி தகத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா. தனது முதல் சர்வதேச இன்னிங்ஸில் 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி. இதில் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகமான வீரர்கள்

>> ஹசன் ராசா - பாகிஸ்தான் - 14 ஆண்டுகள் 227 நாட்கள்

>> வைபவ் சூர்யவன்ஷி - இந்தியா - 15 ஆண்டுகள் 99 நாட்கள்

>> முகமது ஷெரீப் - வங்கதேசம் - 15 ஆண்டுகள் 116 நாட்கள்

>> முஷ்தாக் முகமது - பாகிஸ்தான் - 15 ஆண்டுகள் 124 நாட்கள்

>> அகிப் ஜாவேத் - பாகிஸ்தான் - 16 ஆண்டுகள் 127 நாட்கள்

>> சச்சின் டெண்டுல்கர் - இந்தியா - 16 ஆண்டுகள் 205 நாட்கள்

<div class="paragraphs"><p>வைபவ் சூர்யவன்ஷி</p></div>
Oppo Reno 16c ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in