Oppo Reno 16c ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Oppo Reno 16c ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 16சி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்தியாவில் ரெனோ 16சி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ஒப்போ. இந்த போனுடன் ரெனோ 16 மாடலும் அறிமுகமாகி உள்ளது.

ஒப்போ ரெனோ 16சி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> மீடியாடெக் டிமான்சிட்டி 7300 எனர்ஜி சிப்செட்

>> 50 + 8 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 8, 12 ஜிபி ரேம்

>> 128, 256 ஜிபி ஸ்டோரேஜ்

>> 7,000 mAh பேட்டரி

>> 80 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.46,999 முதல் தொடங்குகிறது

Oppo Reno 16c ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
அயோத்தி போலவே பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை திருட்டு: விசாரணைக்கு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in