97 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி: எலிமினேட்டரில் ராஜஸ்தான் 243 ரன்கள் குவிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி

Updated on
1 min read

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 243 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி, எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நியூ சண்டிகரில் உள்ள முலான்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெய்ஸ்வால் நிதானமாக இன்னிங்ஸை அணுக, வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடினார். 29 பந்துகளில் 97 ரன்களை அவர் சேர்த்தார். இதில் 5 ஃபோர்கள் மற்றும் 12 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 334.48. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை வைபவ் சூர்யவன்ஷி எட்டுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளை அவர் படைத்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற கிறிஸ் கெயிலின் (2013 சீசன் - 59 சிக்ஸர்கள்) சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்துள்ளார். நடப்பு சீசனில் 65 சிக்ஸர்களை வைபவ் சூர்யவன்ஷி விளாசியுள்ளார். இந்த சீசனில் 15 இன்னிங்ஸில் 680 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக ரன்கள் விளாசிய Uncapped (சர்வதேச கிரிக்கெட்டில் சீனியர் பிரிவில் விளையாடாத வீரர்) வீரர் ஆகியுள்ளார் அவர்.

ஜெய்ஸ்வால் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்து துருவ் ஜுரெல் மற்றும் ரியான் பராக் இணைந்து 21 பந்துகளில் 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். துருவ் ஜுரெல், 21 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். ரியான் பராக் 26, தசன் ஷனகா 5, ஃபெரைரா 12, ஆர்ச்சர் 4, பர்கர் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். கடைசி 5 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலர்கள். அது முதல் இன்னிங்ஸில் திருப்புமுனையாக அமைந்தது.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 244 ரன்கள் எடுக்க வேண்டும். இதில் வெற்றி பெறுகின்ற அணி இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் உடன் விளையாடும்.

<div class="paragraphs"><p>ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி</p></div>
ஐபிஎல் ஃபைனலில் அதிக முறை பங்கேற்ற அணிகள்: 3-வது இடத்தில் ஆர்சிபி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in