ஐபிஎல் ஃபைனலில் அதிக முறை பங்கேற்ற அணிகள்: 3-வது இடத்தில் ஆர்சிபி

ஆர்சிபி அணி வீரர்கள்

ஆர்சிபி அணி வீரர்கள்

Updated on
1 min read

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை இறுதிப் போட்டியில் பங்கேற்ற அணிகள் குறித்து பார்ப்போம்.

தரம்சாலாவில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற இந்த சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்களில் வீழ்த்தியது நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆர்சிபி, 20 ஓவர்களில் 254 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் நாக்-அவுட் அல்லது பிளேஆஃப் போட்டியில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களில் மூன்றாம் இடம் பிடித்தது ஆர்சிபி. அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். வெங்கடேஷ் ஐயர் 19, கோலி 43, படிக்கல் 30, க்ருணல் பாண்டியா 43, ஜிதேஷ் 15 ரன்கள் எடுத்தனர்.

தொடர்ந்து இலக்கை விரட்டிய குஜராத் அணி, 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் தெவாட்டியா, 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். பட்லர் 29, சாய் சுதர்ஷன் 14 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில் உட்பட மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல் இறுதியில் அதிக முறை பங்கேற்ற அணிகள்

>> சென்னை சூப்பர் கிங்ஸ் - 10 (ஐந்து முறை பட்டம் வென்றுள்ளது)

>> மும்பை இந்தியன்ஸ் - 6 (ஐந்து முறை பட்டம் வென்றுள்ளது)

>> ஆர்சிபி - 5* (ஒரு முறை பட்டம் வென்றுள்ளது)

>> கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 4 (மூன்று முறை பட்டம் வென்றுள்ளது)

>> சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 3 (ஒரு முறை பட்டம் வென்றுள்ளது)

அடுத்தடுத்த சீசன்களில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அணிகள்

>> சிஎஸ்கே: 2010-11

>> சிஎஸ்கே: 2011-12

>> சிஎஸ்கே: 2018-19

>> மும்பை இந்தியன்ஸ்: 2019-20

>> குஜராத் டைட்டன்ஸ்: 2022-23

>> ஆர்சிபி: 2025-26*

<div class="paragraphs"><p>ஆர்சிபி அணி வீரர்கள்</p></div>
“50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்” - எம்.பி சவுமித்ரா கான் பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in