

கோவா: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடரின் 7-வது சீசன் போட்டி கோவாவில் இன்று தொடங்குகிறது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கோவா சாலஞ்சர்ஸ், யுமும்பா, தபாங் டெல்லி, யுபி புரேமேதியன்ஸ், கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ், பிபிஜி புனே ஜாக்குவார்ஸ், அகமதாபாத் ஏபிஎல் பைப்பர்ஸ் ஆகிய 7 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
இந்த அணிகளில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மற்றும் உலகின் சிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தொடக்க நாளான இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கோவா சாலஞ்சர்ஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன.