ஐசிசியின் ‘Hall of Fame’ பட்டியலில் சவுரவ் கங்குலி!

சவுரவ் கங்குலி

சவுரவ் கங்குலி

Updated on
1 min read

மும்பை: ஐசிசியின் ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியின் பெயர் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 11-ம் தேதி இதுகுறித்து அதிகாரபூர்வமாக ஐசிசி அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 1992-ல் இந்திய அணிக்காக கங்குலி அறிமுகமானார். இருப்பினும் 1996-ல் இங்கிலாந்து மண்ணில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். அதே ஆண்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரராக மாறினார்.

சச்சின் டெண்டுல்கர், கேப்டன் பொறுப்பு வேண்டாம் என விலக 2000-மாவது ஆண்டில் அணியின் கேப்டன் ஆனார் கங்குலி. தனது கிரிக்கெட் கேரியரின் கடைசி கட்டத்தில் ஐபிஎல் களத்தில் விளையாடினார். அவரது தலைமையில் இந்திய அணி மறுமலர்ச்சி அடைந்தது. தனக்குப் பிறகான இந்திய அணியின் எதிர்காலத்தை அபாரமாக கட்டமைத்தார். அது அப்படியே இன்று வரை தொடர்ந்து வருகிறது.

இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18,575 ரன்கள் எடுத்துள்ளார். இந்தியாவின் சச்சின், பாகிஸ்தானின் இன்சமாமை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டிய மூன்றாவது வீரராக அறியப்படுகிறார்.

2003 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்தியவர். இந்திய அணி இந்த தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது. ஆஃப் சைட் திசையில் அநாயசமாக ஆடி ரன் குவிப்பதில் வல்லவர். அவரது தலைமையிலான அணியில் யுவராஜ் சிங், ஜாஹிர் கான், தோனி போன்ற அபார திறன் படைத்த வீரர்கள் இந்திய அணியில் அறிமுகமாகி இருந்தனர். பிசிசிஐ-யின் தலைவராக இரண்டு ஆண்டு காலம் இயங்கியுள்ளார்.

இந்த சூழலில் கிரிக்கெட் விளையாட்டுக்கு சிறந்த முறையில் பங்களிப்பு அளித்த கிரிக்கெட் ஜாம்பவான்களின் சாதனைகளை போற்றும் வகையில் ‘ஹால் ஆப் பேம்’ அங்கீகாரத்தை ஐசிசி வழங்கி வருகிறது.

அந்த வகையில் கிரிக்கெட் வீரர், அணியின் கேப்டன் என்ற முறையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய கங்குலி, ஐசிசி-யின் ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம்பெறுகிறார்.

இந்த பட்டியலில் இணையும் 12-வது இந்திய கிரிக்கெட்டர்

>> பிஷன் சிங் பேடி - 2009

>> சுனில் கவாஸ்கர் - 2009

>> கபில் தேவ் - 2010

>> அனில் கும்ப்ளே - 2015

>> ராகுல் திராவிட் - 2018

>> சச்சின் டெண்டுல்கர் - 2019

>> வினோ மன்கட் - 2021

>> டயானா எடுல்ஜி - 2023

>> சேவாக் - 2023

>> நீத்து டேவிட் - 2024

>> தோனி - 2025

>> சவுரவ் கங்குலி - 2026

<div class="paragraphs"><p>சவுரவ் கங்குலி</p></div>
Moto G77 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in