அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், அரினா சபலென்கா

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், அரினா சபலென்கா
Updated on
2 min read

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்​னிஸ் தொடர் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று முன்​தினம் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்​றில் 2-ம் நிலை வீர​ரான ஸ்பெ​யினின் கார்​லோஸ் அல்​க​ராஸ் 6-3, 6-4, 6-1 என்ற செட் கணக்​கில் 113-ம் நிலை வீர​ரான சீனா​வின் யூ யிபிங்கை வீழ்த்தி 4-வது சுற்​றில் நுழைந்​தார்.

7-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் டேனியல் மேத்​வ​தேவ், 26-ம் நிலை வீர​ரான பிரான்​ஸின் ஆர்​தர் ரின்​டர்​கெனெக்கை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் மேத்​வ​தேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

8-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பென் ஷெல்​டன் 7-6 (7-3), 6-7 (5-7), 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் 48-ம் நிலை வீர​ரான கனடா​வின் டெனிஸ் ஷபோவலோவ்​வை​யும், 11-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் பிரான்​செஸ் தியாபோ 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்​கில் 22-ம் நிலை வீர​ரான மோனாக்​கோ​வின் வாலண்​டின் வச்​செரோட்​டை​யும், 27-ம் நிலை வீர​ரான அர்​ஜெண்​டி​னா​வின் தாமஸ் எச்​செவெரி 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த 49-ம் நிலை வீர​ரான மரி​யானோ நவோனேவை​யும் வீழ்த்தி 4-வது சுற்​றில் கால்​ப​தித்​தனர்.

15-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​ஸாண்​டர் பப்​ளிக் 4-6, 6-3, 7-6 (7-4), 1-6, 3-6 என்ற செட் கணக்கில் 20-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டாமி பாலிடம் தோல்வி அடைந்​தார். இதே​போன்று 18-ம் நிலை வீர​ரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-2, 1-6, 6-7 (3-7), 1-6 என்ற செட் கணக்​கில் 53-ம் நிலை வீர​ரான கிரீஸின் ஸ்டெஃ​பானோஸ் சிட்​சி​பாஸிடம் வீழ்ந்​தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்​றில் நடப்பு சாம்​பியனும், முதல் நிலை வீராங்​க​னை​யு​மான பெலாரஸின் அரினா சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்​கில் உஸ்​பெகிஸ்​தானின் கமிலா ரகிமோ​வாவை வீழ்த்தி 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் ஜெசிகா பெகுலா 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்​கில் 31-ம் நிலை வீராங்​க​னை​யான கனடா​வின் லைலா பெர்​னாண்​டஸை​யும், 11-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்​யுக் 6-3, 6-2 என்ற செட் கணக்​கில் 18-ம் வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் கேத்​ரினா அலெக்​ஸாண்ட்​ரோ​வாவை​யும் வீழ்த்தி 4-வது சுற்​றில் நுழைந்​தனர்.

7-ம் நிலை வீராங்​க​னை​யான செக் குடியரசின் கரோலினா முச்​சோவா 3-6, 5-7 என்ற செட் கணக்​கில் 26-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் எம்மா நவர்​ரோ​விட​மும், 9-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் எலினா ஸ்விட்​டோலினா 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்​கில் 21-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் அனா கலின்​ஸ்​க​யா​விடமும் தோல்வி அடைந்​தனர்.

15-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்யா​வின் டயானா ஷினைடர் 2-6, 7-6 (7-3), 3-6 என்ற செட் கணக்​கில் 96-ம் நிலை வீராங்​க​னையான அமெரிக்​கா​வின் டெய்​லர் டவுன்​சென்​டிடம் வீழ்ந்​தார். 16-ம் நிலை வீராங்​க​னை​யான ருமேனி​யா​வின் சொர்னா கிறிஸ்டி 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் 19-ம் நிலை வீராங்​க​னை​யான இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினியை வீழ்த்தி 4-வது சுற்​றில் கால்​ப​தித்​தார்.

செரீனா - வீனஸ் ஜோடி தோல்வி

மகளிர் இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் முன்​னாள் சாம்​பியன்​களான அமெரிக்​கா​வின் வீனஸ் வில்​லி​யம்​ஸ், செரீனா வில்​லி​யம்ஸ் ஜோடி​யானது சீனதைபே​வின் ஹாவோ-சிங் சான், ஆஸ்​திரேலி​யா​வின் மாயா ஜாயின்ட் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. 3 மணி நேரம் 2 நிமிடங்​கள் நடை​பெற்​ற இந்​த ஆட்​டத்​தில்​ செரீ​னா வில்​லி​யம்​ஸ்​, வீனஸ்​ வில்​லி​யம்​ஸ்​ ஜோடி 3-6, 7-6 (8-6), 6-7 (7-10) என்​ற செட்​ கணக்​கில்​ போ​ராடி தோல்​வி அடைந்​தது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் அல்கராஸ், அரினா சபலென்கா
ஆற்றை தூய்மைப்படுத்திய 21 வயது ம.பி. இளைஞர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in