ஆற்றை தூய்மைப்படுத்திய 21 வயது ம.பி. இளைஞர்

ஆற்றை தூய்மைப்படுத்திய 21 வயது ம.பி. இளைஞர்
Updated on
1 min read

ராஜ்கர்: மத்​திய பிரதேச மாநிலத்​தைச் சேர்ந்த சுரேந்​திர சிங் சவுத்ரி (சமூக வலை​தளங்​களில் ‘பிட்டு தபாஹி’ என அறியப்​படு​பவர்) பிஎஸ்சி படித்து வரு​கிறார். ராஜ்கர் மாவட்​டத்​தின் பியோரா நகரில் ஓடும் ஆஜ்​னார் ஆறு, பிளாஸ்​டிக் குப்​பைகளால் மாசடைந்​திருப்​ப​தைக் கண்டு வேதனையடைந்​தார். இதையடுத்​து, கடந்த ஜனவரி 26-ம் தேதி ஆற்​றைத் தூய்​மைப்​படுத்​தும் முயற்​சி​யில் களமிறங்​கி​னார்.

தூய்​மைப் பணி​களுக்கு முன்​பும், பின்​பும் எடுக்​கப்​பட்ட புகைப்​படங்​களை அவர் சமூக வலை​தளங்​களில் பகிர்ந்​தார். இப்​பு​கைப்​படங்​கள் இணை​யத்​தில் வைரலாகி, பொது​மக்​களின் ஆதர​வை​யும் நகராட்சி அதி​காரி​களின் கவனத்​தை​யும் ஈர்த்​தன. புகைப்​படங்​களின் உண்​மைத்​தன்​மையை உறுதி செய்த பியோரா நகராட்சி நிர்​வாகம், இவருக்கு உதவ முன்​வந்​துள்ளது.

நகராட்சி நிர்​வாகம் பொக்​லைன் இயந்​திரங்​களை அனுப்​பி, ஆற்​றுப் படு​கை​யில் படிந்​திருந்த பிளாஸ்​டிக் கழி​வு​களை​யும் நெகிழிப் பைகளை​யும் முழு​மை​யாக அகற்​றியது. அத்​துடன், அப்​பகு​திப் பொது​மக்​களும் இவருடன் இணைந்து தூய்​மைப் பணி​யில் பங்​கேற்​றனர்.

தொடர் முயற்​சி​யாலும், மழைக்​கால நீர் ஓட்​டத்​தா​லும் ஆஜ்​னார் ஆறு மீண்​டும் தன் பழைய பொலிவைப் பெறத் தொடங்​கி​யுள்​ளது. ஒரு ஆற்​றுக்கே மறு​வாழ்வு அளித்து அரசு நிர்​வாகத்​தை​யும் பொது​மக்​களை​யும் ஒருங்​கிணைத்​துள்ள சுரேந்​திர சிங்​கின் முயற்​சியை பலரும்​ பா​ராட்​டி வரு​கின்​றனர்​.

ஆற்றை தூய்மைப்படுத்திய 21 வயது ம.பி. இளைஞர்
மானவ் சுதார் கவுன்டி கிரிக்கெட்டில் அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in