

புதுடெல்லி: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் உலகத் தரவரிசையில் 39-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி, உலகத் தரவரிசையில் முதலிடமும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் லியு ஷெங் ஷு, டான் நிங் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-18, 13-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.