உலகக் கோப்பை ஹாக்​கி​ தொடரில் அரை இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

உலகக் கோப்பை ஹாக்​கி​ தொடரில் அரை இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
Updated on
1 min read

ஆம்​ஸ்​டல்​வீன்: உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்​றில் நேற்று இந்​திய அணி, நடப்பு சாம்​பிய​னான நெதர்​லாந்​துடன் மோதி​யது.

இதில் நெதர்​லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது. அந்த அணி சார்​பில் டெல்​ஜென்​காம்ப் டுக்கோ (41-வது நிமிடம்), செப் ஹூடேமேக்​கர்ஸ் (51-வது நிமிடம்), வான் டாம் தையிஸ் (55-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்​தனர்.

இந்​திய அணி தரப்​பில் 52-வது நிமிடத்​தில் ஹர்​மன்​பிரீத் சிங் கோல் அடித்​தார்​. இந்த தோல்வியால் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

உலகக் கோப்பை ஹாக்​கி​ தொடரில் அரை இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் முயற்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in