“கிளாசெனை மீண்டும் விளையாட வைக்க தெ.ஆ. வாரியம் முயற்சிக்க வேண்டும்” - கெவின் பீட்டர்சன்

“கிளாசெனை மீண்டும் விளையாட வைக்க தெ.ஆ. வாரியம் முயற்சிக்க வேண்டும்” - கெவின் பீட்டர்சன்
Updated on
1 min read

லண்​டன்: சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தென் ஆப்​பிரிக்க வீரர் ஹெய்ன்​ரிச் கிளாசெனை தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம் மீண்​டும் போட்​டிகளில் விளை​யாட வைக்க முயற்​சிக்க வேண்​டும் என இங்​கிலாந்து அணி​யின் முன்​னாள் கேப்​டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்​பிரிக்க வீர​ரான ஹென்​ரிச் கிளாசன் கடந்த ஆண்டு ஜூன் மாதத்​தில் சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெற்​றார். ஓய்வு பெற்​ற​போ​தி​லும் கிளாசென் ஐபிஎல் தொடரில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்​காக விளை​யாடி வரு​கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹெய்ன்​ரிச் கிளாசென் ஹைத​ரா​பாத் அணிக்​காக அதிரடி ஆட்​டம் மூலம் அதிக ரன்​களைக் குவித்துள்ளார். இந்த சீசனில் இது​வரை அவர் 414 ரன்​கள் விளாசியுள்​ளார்.

இந்​நிலை​யில், தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம், ஹெய்ன்ரிச் கிளாசெனை அவரது ஓய்வு முடிவை திரும்​பப் பெற்று மீண்​டும் தென் ஆப்​பிரிக்க அணிக்​காக விளை​யாட வைக்க முயற்​சிக்க வேண்​டும் என இங்​கிலாந்து அணி​யின் முன்னாள் கேப்​டன் கெவின் பீட்​டர்​சன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்​பாக அவர் தனது சமூக வலை​தளப் பக்கத்​தில் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை தென் ஆப்​பிரிக்க அணி உலகக் கோப்​பையை வென்​றது கிடை​யாது.

தென்​னாப்​பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம் ஹெய்ன்​ரிச் கிளாசெனை அழைத்து பேச்​சு​வார்த்தை நடத்​தவேண்​டும். அவரை மீண்​டும் தென் ஆப்​பிரிக்க அணிக்​காக விளை​யாட வேண்​டும் என்று வாரியம் வலி​யுறுத்த வேண்​டும். அப்​படி செய்​தால், முதல் முறையாக உலகக் கோப்​பையை வெல்ல முயற்சி செய்​யும்​ தென்​ ஆப்​பிரிக்​க அணிக்​கு அது மிக​வும்​ உதவி​யாக இருக்​கும்​. இவ்​வாறு கெ​வின்​ பீட்​டர்​சன்​ கூறியுள்​ளார்.

“கிளாசெனை மீண்டும் விளையாட வைக்க தெ.ஆ. வாரியம் முயற்சிக்க வேண்டும்” - கெவின் பீட்டர்சன்
திமுக ‘கூட்டணி’ ஆட்சியா? - கருத்துக் கணிப்பு முடிவுகள் மீதான விரைவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in