நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் எமிலியோவுக்கு வாய்ப்பு

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் எமிலியோவுக்கு வாய்ப்பு
Updated on
1 min read

லண்டன்: நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி அடுத்த மாத தொடக்கத்​தில் இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 3 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இந்​தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 4-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இந்​நிலை​யில் இந்த போட்டிக்கான அணியை இங்​கிலாந்து கிரிக்​கெட் வாரி​யம் நேற்று அறி​வித்​தது.

தொடக்க வீர​ரான 26 வயதான எமிலியோ கே அறி​முக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அதேவேளை​யில் ஸாக் கிராவ்லி நீக்கப்பட்டுள்​ளார். இதே​போன்று ஆலி போப்​புக்​கும் அணி​யில் இடம் அளிக்​கப்​பட​வில்​லை. கவுண்டி போட்​டிகளில் எமிலியோ கே 3 சதங்​கள் விளாசி சிறந்த பார்​மில் இருப்​ப​தால் அவர், தேசிய அணிக்​குள் கொண்​டு​வரப்​பட்​டுள்​ளார். வேகப்​பந்து வீச்​சாள​ரான சோனி பேக்​கர், விக்​கெட் கீப்​ப​ரான ஜேம்ஸ் ரியூ ஆகியோ​ரும் அறிமுக வீரர்​களாக இடம் பெற்​றுள்​ளனர்.

வேகப்​பந்து வீச்​சில் ஆலி ராபின்​சன், கஸ் அட்​கின்​சன் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்​ளனர். ஜோப்ரா ஆர்ச்​சர், ஐபிஎல் தொடரில் விளை​யாடி வரு​வ​தால் அவரது பெயர் அணித் தேர்​வின் போது பரிசீலிக்​கப்​பட​வில்​லை. மார்க் வுட்​டுக்கு பதிலாக மேத்யூ ஃபிஷர் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இங்​கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் டக்​கெட், எமிலியோ கே, ஜேக்​கப் பெத்​தேல், ஜோ ரூட், ஹாரி புரூக், மேத்யூ ஃபிஷர், ஜேம்ஸ் ரியூ, ஆலி ராபின்​சன், ஜேமி ஸ்மித், ரேஹான் அகமது, ஷோயப் பஷீர், கஸ் அட்​கின்​சன், சோனி பேக்​கர்​, ஜோஷ் டங்​.

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணியில் எமிலியோவுக்கு வாய்ப்பு
விஜய் மாஸ்… மத்​தவங்க க்ளோஸ்... யாரையும் விட்டுவைக்காத தவெக அலை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in