விஜய் மாஸ்… மத்​தவங்க க்ளோஸ்... யாரையும் விட்டுவைக்காத தவெக அலை!

விஜய் மாஸ்… மத்​தவங்க க்ளோஸ்... யாரையும் விட்டுவைக்காத தவெக அலை!
Updated on
2 min read

“இவரெல்​லாம் ஜெயிக்க வாய்ப்​பில்​லை” என்று வியூ​கப் புலிகளால் ஒதுக்​கப்​பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகு​தி​களை வென்று ஆட்​சி​யை​யும் தக்​க​வைத்து விட்​டார். ஆனால், அவரால் உருவாக்கப்​பட்ட வெற்றி அலை​யானது தமிழகத்​தின் அனைத்​துக் கட்​சிகளை​யும் கலகலக்க வைத்​துக் கொண்​டிருக்​கிறது.

விஜய்​யோடு எப்​போது கைகோக்​கலாம் என சமயம் பார்த்​துக் கொண்​டிருந்த காங்​கிரஸ், தேர்​தல் முடிவு​கள் வெளி​யானதுமே முதல் ஆளாக ஓடிப்​போய் தவெக-வுக்கு ஆதர​வளித்​தது. இதனால், திமுக கூட்​டணி மட்​டுமல்​லாது இண்​டியா கூட்​ட​ணியே கலகலக்க ஆரம்​பித்​தது. காங்​கிரஸும் திமுக-​வும் பரஸ்​பரம் கண்​டனக் கணைகளை வீசிக் கொண்​டன.

இதனையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கும் கம்​யூனிஸ்ட்​கள், விசிக, முஸ்​லிம் லீக் கட்​சிகளின் ஆதரவை நாடியது தவெக. இது தொடர்​பாக அந்​தக் கட்​சிகளுக்​குள்​ளும் அனல் பறக்​கும் விவாதங்கள் அரங்​கேறின. இருப்​பினும் கொல்​லைப்​புற வழி​யாக பாஜக உள்ளே வரு​வதை தவிர்ப்​ப​தற்​காக தவெக ஆட்​சி​யமைக்க ஆதர​வளிப்​ப​தாக அறி​வித்த கம்​யூனிஸ்ட்​கள், திமுக கூட்​ட​ணி​யில் தாங்​கள் தொடர்ந்து நீடிப்​ப​தாக​வும் அறி​வித்​தன.

தவெக-வுக்கு ஆதர​வளிக்​கும் விவ​காரத்​தில் விசிக-வுக்​குள் இரு மாறு​பட்ட கருத்​துகள் எழுந்​தன. வன்னி அரசு போன்​றவர்​கள், “தமிழகத்​தின் நலன் கருதி முடி​வெடுப்​போம். இது திரு​மா​வின் காலம்” என்​றார்​கள்.

சிந்​தனைச் செல்​வன் போன்​றவர்​களோ, “திரு​மாவை முதலமைச்சராக்​கும் முடிவை திரா​விடக் கட்​சிகள் எடுக்க வேண்டும்” என்​றதுடன், “மன்​ன​ராட்​சிக்கு முடிவு​கட்டி விட்​ட​தாக தவெக எப்​படிச் சொல்​லலாம்? வாட்ஸ் அப்​பில் ஆதரவு கேட்பதுதான் முறை​யான அணுகு​முறை​யா?” எனவும் ஆர்ப்பரித்தார்​கள். மாவட்ட நிர்​வாகி​களோ, “விஜய்யை ஆதரித்தால் மட்​டுமே கட்​சிக்கு நல்​லது” என கருத்​துச் சொன்னார்கள்.

இதற்கு நடு​வில், ‘அதி​முக ஆட்​சி​யமைக்க திமுக வெளி​யில் இருந்து ஆதர​வு’ என்ற செய்​தி​கள் வெளி​யாகி, திமுக மற்​றும் அதிமுக-வுக்​குள் பெரும் அதிர்​வு​களை ஏற்​படுத்​தி​யது. இந்த முடிவால் தங்​களின் எதிர்​காலம் என்​னாகும் என்​பதை பற்றி தீர யோசிக்​காமலேயே இருபெரும் திரா​விடக் கட்​சிகளும் இந்த முடிவை நோக்கி நகர்ந்​தன. அதி​காரம் கைக்கு வரு​வது போல் தோன்​றிய​தால் அதி​முக இந்த விஷ​யத்​தில் அடக்கி வாசித்​தா​லும் திமுக-வுக்​குள் அனல் புயல் அடித்​தது.

“மக்​களின் தீர்ப்பை மதிப்​பது தான் சரி. ஆளுநர் தவெக-வை ஆட்​சி​யமைக்க அழைக்க வேண்​டும்” என்று சொன்​னார் திமுக துணைப் பொதுச்​செய​லா​ளர் கனி​மொழி. முடிவு​கள் தற்​போது வேறு திசை நோக்கி நகர ஆரம்​பித்து விட்​டாலும் ‘அதி​முக ஆட்​சி​யமைக்க ஆதரவு’ என்ற செய்தி குறித்​தான விவாதங்​கள் திமுக-வுக்​குள் இன்ன​மும் ஓயவில்​லை.

இதற்கு மத்​தி​யில் அமமுக பொதுச் செய​லா​ளர் தினகரன் தனது கட்சி​யின் ஒரே எம்​எல்​ஏ-வை காண​வில்லை என புகார் கிளப்பினார். விஜய்க்கு அமமுக எம்​எல்​ஏ-​வான காம​ராஜ் ஆதரவளித்​த​தாக பொய்​யான ஒரு கடிதத்​தின் நகலை ஆளுநரிடம் தந்​திருப்​ப​தாக ஆவேசப்​பட்ட அவர், இந்த விவ​காரத்தை போலீஸ் புகார் வரைக்​கும் கொண்டு போனார். இதன் பின்​னணி​யில் குதிரை பேரம் நடந்​திருப்​ப​தாக அவர் பழி​போட்ட நிலை​யில், 12-ம் தேதி பேரவைக்கு வந்த காம​ராஜ், விஜய்யை வானளாவ புகழ்ந்​து, அந்​தக் கடிதம் போலியல்ல என தினகரனுக்கே திகில் கொடுத்​தார்.

இதையடுத்​து, காம​ராஜை கட்​சியி​லிருந்து கடாசி​னார் தினகரன். விஜய்க்கு ஆதர​வளித்த விஷ​யத்​தில் காங்​கிரஸ் எம்​எல்​ஏ-க்​களில் சிலரும் அதிருப்​தி​யில் இருப்​ப​தாக​வும் அதனால் அவர்​கள் ‘பத்திரமாக’ பாது​காக்​கப்​பட்​ட​தாக​வும் சொல்​கிறார்​கள்.

கடைசி​யாக விஜய் புய​லானது அதி​முக-வை​யும் விட்டுவைக்கவில்​லை. திமுக ஆதர​வில் முதல்​வ​ராக நினைத்ததாக பழனி​சாமி மீது பகிரங்​க​மாக பழி​போட்ட முன்​னாள் அமைச்​சர் சி.​வி.சண்​முகம், தவெக-வுக்கு ஆதர​வளிக்​கும் வித​மாக எஸ்​.பி.வேலுமணி தலை​மை​யில் தனி அணி திரட்​டி​னார். அதன்படியே பழனி​சாமி ஒரு பக்​கம் எஸ்​.பி.வேலுமணி ஒரு பக்​கம் என அதி​முக சட்​டமன்​றக் குழு​வுக்கு இரண்டு தலை​வர்​களை அறி​வித்​துக் கொண்​டார்​கள்.

தவெக அரசுக்கு ஆதர​வில்லை என அறி​வித்​தது பழனி​சாமி தலைமையி​லான அதி​முக. இதனிடையே, சி.​வி.சண்​முகம் தரப்பிடம் ‘பேசவேண்​டியதை’ பேசி​முடித்​தது தவெக வியூக வகுப்புக் குழு. அதனால், பழனி​சாமியை தவிர்த்​து​விட்டு சி.வி.சண்முகம் தரப்பை நேரில் சந்​தித்து நன்றி தெரி​வித்​தார் முதல்​வர் விஜய். இதனால், ஏற்​கெனவே, விஜய்க்கு ஆதர​வுக் கரம் நீட்​டிய திமுக கூட்​ட​ணிக் கட்​சிகள் சற்றே ‘ஜெர்க்’ ஆகின. அதிமுகவின் ரெண்​டு​பட்ட நிலைப்​பாட்​டால் அதன் கூட்​ட​ணிக் கட்சி​யான பாமக ‘நடுநிலை’ மோடுக்​குப் போனது.

இந்த நிலை​யில், நேற்று பேர​வை​யில் விஜய் கொண்டு வந்த நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக எஸ்​.பி.வேலுமணி தலை​மையி​லான அதி​முக எம்​எல்​ஏ-க்​கள் 25 பேர் வாக்​களித்​தனர். அதே​போல் உதயசூரியன் சின்​னத்​தில் வெற்​றி​பெற்ற மதி​முக எம் எல்​ஏ-க்​கள் இரு​வரும் நேற்று பேர​வைக்கு வராமல் ஒதுங்கினார்கள். இதற்​கு, அவர்​கள் இரு​வரை​யும் தவெக விலைக்கு வாங்​கி​விட்​ட​தாக கடுமை​யாக எதிர்​வினை​யாற்​றி​னார் திமுக தலை​வர் ஸ்டா​லின்.

இதே​போல், “அமைச்​சர் பதவி​யும் வாரி​யத் தலை​வர் பதவி​களும் தரு​வதாக குதிரை பேரம் பேசி அதி​முக எம்​எல்​ஏ-க்​களை இழுத்திருக்​கிறார்​கள்” என்று பேர​வைக்கு வெளியே வெடித்​தார் பழனி​சாமி.

ஆக, தேறுமா என்று சந்​தேகத்​துடன் பார்க்​கப்​பட்ட தவெக அரசு, 144 உறுப்​பினர்​களின் ஆதர​வைப் பெற்று சுலப​மாக தேறி​விட்​டது. ஆனால், தமிழகத்​தின் பிற கட்​சிகள் தான் விஜய் புய​லால் விடை தெரி​யாத புதிருக்கு ஆளாகி இருக்கின்றன.

விஜய் மாஸ்… மத்​தவங்க க்ளோஸ்... யாரையும் விட்டுவைக்காத தவெக அலை!
எளிதில் தப்பியது தவெக அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு அதிமுக அதிருப்தி அணியும் ஆதரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in