இந்​திய வீரர் திலக் வர்மாவுக்கு தெலங்​கானா முதல்​வர் பாராட்டு

இந்​திய வீரர் திலக் வர்மாவுக்கு தெலங்​கானா முதல்​வர் பாராட்டு
Updated on
1 min read

ஹைத​ரா​பாத்: இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் திலக் வர்மாக்கு தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு தெரி​வித்​தார்.

கடந்த 8-ம் தேதி நடை​பெற்ற ஐசிசி டி20 கிரிக்​கெட் போட்டியில் இந்​திய அணி கோப்​பையை வென்று சாதனை படைத்​தது. இந்​தப் போட்​டி​யில், திலக் வர்மா மிகச்​சிறப்​பாக விளை​யாடி ரன்​களைக் குவித்​தார். அண்​மை​யில் அவர் தெலங்​கானா தலைநகர் ஹைத​ரா​பாத்​துக்​குத் திரும்​பி​னார்.

இந்​நிலை​யில் கோப்​பையை வென்ற அணி​யில் இடம்​பிடித்த இந்​திய வீரர் திலக் வர்​மாவை, தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று நேரில் அழைத்​துப் பாராட்டினார். தெலங்​கானா தலை​மைச் செயல​கத்​தில் நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள், அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டு திலக் வர்​மாவுக்​குப் பாராட்​டுத் தெரி​வித்​தனர்.

அப்​போது தெலங்​கானா மாநில சிறு​பான்​மை​யினர் நலத்​துறை அமைச்​சரும், இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​ட​னு​மான முகமது அசா​ருதீன் கூறும்​போது, “திலக் வர்​மா​வின் சாதனை​கள், தெலங்​கானா முழு​வ​தி​லும் உள்ள இளம் விளை​யாட்டு வீரர்​களை, விளை​யாட்​டுத் துறை​யில் தங்​கள் வாழ்க்​கை​யைத் தொடர​வும், சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வைப் பிர​தி​நி​தித்​து​வப்​படுத்​த​வும் ஊக்​குவிக்​கும்” என்​றார்.

இந்​திய வீரர் திலக் வர்மாவுக்கு தெலங்​கானா முதல்​வர் பாராட்டு
தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.23 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in