கடைசி ஆட்டத்தில் மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்: டி20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

கடைசி ஆட்டத்தில் மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்: டி20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
Updated on: 
2 min read

பெங்களூரு: இந்​தியா - மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி20 போட்டி பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமநிலை​யில் உள்​ளது. இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்​பற்​றும் என்​ப​தால் இந்த போட்டி மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி உள்​ளது. இன்​றைய போட்டி நடை​பெறும் பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதான ஆடு​களம் தட்​டை​யானது.

மேலும் குறுகிய பவுண்​டரி​கள் கொண்​ட​தால் இந்த ஆடு​களம் பந்​து​வீச்​சாளர்​களுக்​குச் சிம்ம சொப்​பன​மாகத் திகழும். இருப்​பினும், கடந்த 2024-ம் ஆண்டு அக்​டோபரில் நியூஸிலாந்​துக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டிக்​குப் பிறகு, இந்த மைதானத்​தில் சர்​வ​தேசப் போட்​டிகள் எது​வும் நடை​பெற​வில்​லை. இந்​தக் கால​கட்​டத்​தில் ஐபிஎல் தொடரின் சில ஆட்​டங்​களைத் தவிர, பெரிய அளவி​லான போட்​டிகளும் நடை​பெற​வில்​லை.

இதனால், ஆடு​களத்​தின் தற்​போதைய தன்​மை​யைப் பற்றி இரு அணி​களுக்​கும் போதிய பரிச்​ச​யம் இல்​லாத சூழல் உரு​வாகி​யுள்​ளது. இது இரு அணி​களுக்​கும் இடையி​லான போட்​டியை ஓரளவுக்​குச் சமநிலைப்​படுத்​தக்​கூடும். இந்​தச் சூழலில், இந்​திய அணி குல்​தீப் யாதவை மீண்​டும் விளை​யாடும் லெவனில் சேர்ப்​பது குறித்து பரிசீலிக்​கக்​கூடும்.

ஏனெனில் அவர் கடைசி 2 ஆட்​டங்​களில் அணி​யில் சேர்க்​கப்​பட​வில்​லை. இதுஒரு​புறம் இருக்க வேகப்​பந்து வீச்​சாள​ரான அர்​ஷ்தீப் சிங் கடந்த போட்​டி​யில் பேட்​டிங்​கின் போது காயம் அடைந்​தார். இதனால் அவர், இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வது சந்​தேகம் என்றே கருதப்​படு​கிறது. இதனால் அவருக்கு மாற்ற இந்​திய அணி​யில் அனுபவம் வாய்ந்த சீனியர் வேகப்​பந்து வீச்​சாள​ரான புவனேஷ்வர் குமார் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்​சிபி அணிக்​காக விளை​யாடி வரும் புவனேஷ்வர் குமார், பெங்​களூரு ஆடு​களத்​தில் கடந்த 2 சீசன்​களாக உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்தி உள்​ளார். இதனால் அவர், மீது எதிர்​பார்ப்பு உள்​ளது. ஷாய் ஹோப் தலை​மையி​லான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி நடப்பு தொடரில் உலக சாம்​பிய​னான இந்​திய அணிக்கு கடும் சவால் அளித்து வரு​கிறது. ஷாய் ஹோப் 2 சதங்​கள், ஒரு அரை சதத்​துடன் 261 ரன்​கள் விளாசி மிரட்டி உள்​ளார்.

மற்​றொரு அதிரடி பேட்​ஸ்​மே​னான ஷெர்ஃபேன் ரூதர்ஃ​போர்ட் 2 அரை சதங்​களு​டன் 221 ரன்​களைக் குவித்​துள்​ளார். இவர்​கள் இரு​வரும் மீண்​டும் ஒரு முறை இந்​திய அணி​யின் பந்​து​வீச்சை வரிசையை கடும் சோதனைக்கு உட்​டபடுத்​தக்​கூடும்​. இதற்​கிடையே கடந்​த

சில ​நாட்​களாக பெங்​களூரு நகரில்​ மழை பெய்​து வரு​கிறது. நகர்​ பகு​தி​யில்​ இன்​று இடி​யுடன்​ கூடிய மழைக்​கு ​வாய்​ப்​பு இருப்​ப​தாக ​வானிலை மையம்​ அறி​வித்​துள்​ளது. இத​னால்​ இன்​றைய ஆட்​டம்​ மழை​யால்​ ​பா​திக்​கப்​பட ​வாய்​ப்​பு உள்​ளது.

ஸ்ரேயஸ் ஐயருக்கு நெருக்கடி

இன்​றைய போட்​டி​யில் தோல்​வியடைந்​தால், கேப்​ட​னாக ஸ்ரேயஸ் ஐயரின் மதிப்​புக்​கும் நிச்​ச​யம் பாதிப்பு ஏற்​படும். அயர்​லாந்​து, இங்​கிலாந்து அணி​களுக்கு எதி​ரான தொடர்​களில் ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்​திய அணி தோல்வி​களைச் சந்​தித்து இருந்​தது. எனினும் பலம் குறைந்த ஜிம்​பாப்​வே, ஆப்​கானிஸ்​தான் அணி​களுக்கு எதி​ரான வெற்​றிகள் மூலம் ஸ்ரேயஸ் ஐயர் இழந்த நற்​பெயரை ஓரளவு மீட்​டெடுத்​தார்.

தற்​போதைக்கு அவரது கேப்​டன் பதவிக்கு எந்த ஆபத்​தும் இல்​லை​யென்​றாலும், அனுபவ​மும் அதிரடித் திறனும் கொண்ட எதிரணிக்கு எதி​ராக நெருக்​கடி​யான சூழல்​களில் அணி​யைச் சரி​யான பாதை​யில் வழிநடத்​தும் ஸ்ரேயஸ் ஐயரின் கேப்​டன்​ஷிப் திறன் குறித்து கேள்வி​கள் எழும்.

கடைசி ஆட்டத்தில் மே.இ.தீவுகளுடன் இன்று மோதல்: டி20 தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
யு23 உலக சாம்​பியன்​ஷிப் மல்யுத்தம் முதல் ரஞ்சி கோப்பை வரை | ஸ்போர்ட்ஸ் ரவுண்ட்-அப்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in