தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் வெற்றி

தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் வெற்றி
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐசிஎஃப் - தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. இந்த மோதலில் ஐசிஎஃப் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் துஷால் குமார், புருத்வி ஆகியோர் தலா 2 கோல்களும், கிரண் குமார் ஒரு கோலும் அடித்தனர். தயாந்த் வீரன்ஸ் அணி சார்பில் வெற்றிவேல், முகமது கைஃப் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏஜிஓ 4-3 என்ற கோல் கணக்கில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. ஏஜிஓ அணி தரப்பில் சிரன் மேடப்பா, வீரத்தமிழன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் வெற்றி
சேப்பாக் சூப்பர் கில்லீஸுடன் கோவை கிங்ஸ் இன்று மோதல் | TNPL 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in