

சென்னை: டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ், விடா கோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லில் நடைபெற்று முடிந்துள்ளன.முதல் சுற்றின் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 4-ல் வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் 2-ம் கட்ட லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகின்றன. இந்நிலையில் இன்று இரவு 7.30 நடைபெறும் லீக் ஆட்டத்தில், புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், 6-ம் இடத்தில் உள்ள விடா கோவை கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.