சூப்பர் 8 சுற்றில் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி | T20 WC 2026 - IND vs SA

சூப்பர் 8 சுற்றில் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி | T20 WC 2026 - IND vs SA
Updated on
1 min read

அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, 187 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நம்பிக்கை அளித்த போதிலும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் ஸ்டப்ஸ் 20 ரன்களை விளாசியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

188 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்தியா அணிக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. தொடஜ்க்க வீரர் இஷன் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, திலக் வர்மாவும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.

மிடில் ஆர்டரில் எந்தவொரு வீரரும் வலுவாக நின்று ஆடாததால், இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு முன்பே சுருண்டது.

அகமதாபாத் மைதானத்தில் 185 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தி இதுவரை எந்த அணியும் வென்றதில்லை என்ற மோசமான சாதனை இப்போட்டியிலும் தொடர்ந்தது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இந்தத் தோல்வி அரை இறுதி வாய்ப்பிற்குச் சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.

சூப்பர் 8 சுற்றில் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி | T20 WC 2026 - IND vs SA
சூப்பர் 8 ஆட்டத்தில் 95 ரன்களுக்கு சுருண்டது இலங்கை: இங்கிலாந்து வெற்றி - T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in