குறைவான ஸ்பின், வேகத்திற்கு நல்ல பவுன்ஸ்: இறுதிப் போட்டி பிட்ச் எப்படி இருக்கும்?

குறைவான ஸ்பின், வேகத்திற்கு நல்ல பவுன்ஸ்: இறுதிப் போட்டி பிட்ச் எப்படி இருக்கும்?
Updated on
1 min read

அகமதாபாத்தில் நாளை நடைபெறும் இந்தியா-நியூஸிலாந்து டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான பிட்ச் கிட்டத்தட்ட மும்பையில் அரையிறுதியில் போடப்பட்ட பிட்ச் போலவே இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இறுதிப் போட்டிக்கான பிட்சும் பந்துகள் அதிகம் திரும்பாமல் ஆனால் நல்ல பவுன்ஸ் உள்ள பிட்ச் ஆக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அன்று அரையிறுதியில் சுமார் 500 ரன்கள் குவிக்கப்பட்டன. ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல்களின் படி பிட்ச் சிகப்பு மற்றும் கருப்பு மண்களின் கலவையாக இருக்கும் போல் தெரிகிறது. அதாவது பிட்சில் பவுன்ஸ் இருக்கும் என்பதால் புதிய பந்துகள் ஸ்விங் ஆகி பவுன்ஸ் ஆகும் ஆனால் ஸ்பின் கொஞ்சமாகவே ஆகும் வகையில் பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 200 ரன்கள் என்பது இரு அணிகளுக்கும் சம இலக்காக இருக்கும் வகையில் பிட்ச் இருக்கலாம். இந்தப் பிட்சில் இந்த உலகக்கோப்பையில் ஒரே ஒரு போட்டிதான் நடைபெற்றது, அது கனடா/தென் ஆப்பிரிக்கா இடையேயான போட்டியாகும். அது பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற்ற்து. இப்போது இதே பிட்ச் பிரஷ் ஆகவே உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா 213 ரன்கள் குவித்து 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அகமதாபாத்தில் நியூசிலாந்து ஒரேயொரு போட்டியில்தான் இந்தத் தொடரில் ஆடியது. இந்தியா 2 போட்டிகள் ஆடியது. தென் ஆப்பிரிக்கா நியூசிலாந்து அணியின் 177 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி 7 விக்கெட்டுகளில் வென்றது.

பிறகு சூப்பர் 8 போட்டியில் கருத்த மண் பிட்சில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவைப் பந்தாடியது நினைவிருக்கலாம். துபாயில் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திதான் இந்தியா கோப்பையை வென்றது, இப்போது ஓராண்டில் மீண்டும் அதே நியூஸிலாந்தை டி20 இறுதியிலும் சந்திக்கிறது.

ஸ்பின் எடுக்காது எனும் போது வருண் சக்ரவர்த்தி லெவனில் இருக்க மாட்டார் என்று நம்பலாம். வருண் சக்ரவர்த்தி பவுலிங் வர வர செம சாத்துமுறை வாங்குகிறது. அவரை ஒருவாறாக அணிகள் கணிக்கத் தொடங்கி விட்டனர், அவரும் முன்னேற்றம் காணவில்லை. எனவே இந்தியப் பந்து வீச்சு வரிசை பும்ரா, அர்ஷ்தீப், பாண்டியா, அக்சர் படேல் ஆகியோருடன் வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது.

குறைவான ஸ்பின், வேகத்திற்கு நல்ல பவுன்ஸ்: இறுதிப் போட்டி பிட்ச் எப்படி இருக்கும்?
“அவரும் மனிதர் தானே” - பும்ரா குறித்து நியூஸி. வீரர் கிளென் பிலிப்ஸ் | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in