

காலே: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.
இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி காலே சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடர் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது. இதனால் இந்த 2 போட்டிகளும் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தனஞ்ஜெயா டி சில்வா கேப்டனாக தொடர்கிறார். துணை கேப்டனாக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பராக நிரோஷன் டிக்வெலா சேர்க்கப்பட்டுள்ளார்.
பேட்ஸ்மேன்களாக லகிரு உதரா, நிஷான் மதுஷ்கா, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டாரா, சோனல் தினுஷா இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, கேஷர நுவந்தா ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சில் அசிதா பெர்னாண்டோ, லகிரு குமாரா, விஷ்வா பெர்னாண்டோ ஆகியோர் உள்ளனர்.
இலங்கை அணி விவரம்: தனஞ்ஜெயா டி சில்வா (கேப்டன்), லஹிரு உதாரா, நிஷான் மதுஷ்கா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டாரா, சோனல் தினுஷா, நிரோஷன் டிக்வெல்லா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, கேஷர நுவந்தா, மிலன் ரத்நாயகே, அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, விஷ்வ பெர்னாண்டோ, தில்ஷான் மதுஷங்க.