

பியூனஸ் அய்ரஸ்: நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, கடந்த வாரம் காலமானார். இந்நிலையில், தனது தந்தையின் நீங்கா நினைவுகளை லியோனல் மெஸ்ஸி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாகிராம் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது: “அப்பா, எங்களை விட்டு நீங்கள் மறைந்து விட்டீர்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்களை இனிமேல் என்னால் பார்க்கவே முடியாது என்பது எனக்கு கடினமாக உள்ளது. உங்களது உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஆனால், எங்களை விட்டு நீங்கள் விரைந்து சென்று விட்டீர்கள். நாம் அனுபவிக்க விஷயங்கள் ஏராளம் இருந்தன.
சென்ற உலகக் கோப்பை தொடரில் என்னை விளையாடுமாறு நீங்கள் சொல்லி வந்தீர்கள். அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு உங்களது ஆரோக்கியம் மிக மோசமடைந்தது. நீங்கள் என்னுடன் இல்லாத முதல் தொடராக அது அமைந்தது. ஆனால், உங்கள் உடல்நலம் விரைந்து குணம் பெற்று, நீங்கள் பயணிக்க தயார் ஆகும் காலம் வரும் என்று அம்மா சொல்லி இருந்தார். நிச்சயம் நாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்று உங்களிடம் நான் சொல்லி இருந்தேன்.
ஒவ்வொரு ஆட்டம் முடிந்ததும் உங்களது மெசேஜுக்காக நான் காத்திருந்தேன். ஆனால், அது எனக்கு வரவில்லை. அப்போதுதான் எனக்கு அது தெரிந்தது உங்களது உடல்நிலை மேலும் மோசமடைந்தது என்று. இருப்பினும் அந்த தொடரின் அணியின் அடுத்தடுத்த வாய்ப்புகளை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால், நீங்கள் ஒரு ஆட்டத்தை கூட காண வரவில்லை.
உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய கோப்பையை உங்களிடம் காண்பிக்க விரும்பினேன். ஆனால், என்னால் அது முடியவில்லை. நான் முயற்சித்தேன். எனது உடல் ஒத்துழைக்கவில்லை.
நாங்கள் ஆட்டத்தை பெனால்டியில் இழந்தோம் என்று நீங்கள் எண்ணி இருந்தீர்கள். ஆனால், அது குறித்து பேசும் சூழல் நமக்கு அமையவில்லை.
நீங்கள் இல்லாமால் நான் என்ன செய்யப்போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் கால்பந்து விளையாடினேன். ஆனால், இப்போது எனக்கு அதில் சந்தேகம் உள்ளது. இன்னும் எத்தனை நாள் இதை தொடர்வேன் என்று எனக்கு தெரியவில்லை. அதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
தொடக்கம் முதல் என்னுடன் நீங்கள் இருந்தீர்கள். இதன் முடிவு இன்னும் சில காலம் தான். அது மிக நெருக்கத்தில் உள்ளது. நீங்கள் ஏன் அதுவரை இல்லை.
உங்களை நான் அதிகம் மிஸ் செய்வேன். ஆனால், என்னுடன் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். எனது பிள்ளைகளின் கல்வியில் உங்கள் பங்கு இருக்கும். ஏனெனில், என்னை நீங்கள் வளர்த்தது போல அவர்களை நான் வழிநடத்துகிறேன். இங்கிருந்து எங்களை பார்த்தது போல அங்கிருந்து பாருங்கள். அனைத்துக்கும் நன்றி. Rest In Peace” என்றார் மெஸ்ஸி.
“லியோ இந்த கடினமான நேரத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது அரவணைப்பு. மனவலிமை கொள்ளுங்கள்” என்று அந்த பதிவில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ ஆறுதல் தெரிவித்துள்ளார்.