தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வீரர்கள் தாயகம் புறப்பட்டனர்

தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வீரர்கள் தாயகம் புறப்பட்டனர்
Updated on
1 min read

துபாய்: ஈ​ரான்​-இஸ்​ரேல் போர் எதிரொலி காரண​மாக இந்தி​யா​விலேயே தங்​கி​யிருந்த தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​களின் வீரர்​கள் நேற்று இந்​தி​யா​விலிருந்து புறப்​பட்டு தாயகம் சென்​றனர்.

கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக இந்​தி​யா, இலங்கை நாடு​களில் நடை​பெற்ற வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 8-ம் தேதி நிறைவு பெற்​றது. இந்​நிலை​யில் ஈரான்​-இஸ்​ரேல் போர் காரண​மாக விமான போக்​கு​வரத்து சேவை பாதிக்​கப்​பட்​ட​தால் தென் ஆப்பிரிக்க, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​களின் வீரர்​கள் தாயகம் திரும்​பிச் செல்ல முடி​யாமல் கொல்​கத்தா நகரிலேயே தங்கி​யிருந்​தனர்.

இதையடுத்து அவர்​களை அவர்​களது நாட்​டுக்கு அனுப்புவதற்​கான பணி​களில் சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்சில் (ஐசிசி) ஈடு​பட்டு வந்​தது. இந்த வகை​யில் நேற்று மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, தென் ஆப்​பிரிக்க அணி வீரர்​கள் விமானம் மூலம் அவர்​களது நாடு​களுக்​குப் புறப்பட்​டுச் சென்​றனர்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யைச் சேர்ந்த 9 வீரர்​கள் 2 நாட்​களுக்கு முன்பு அவர்​களது தாய்​நாட்​டுக்கு புறப்பட்டுச் சென்​றனர். எஞ்​சி​யிருந்த 16 வீரர்​கள் நேற்று இயக்​கப்​பட்ட விமானத்​தில் புறப்​பட்​டுச் சென்​றனர். தென் ஆப்​பிரிக்க அணி​யைச் சேர்ந்த 29 வீரர்​கள், நிர்​வாகி​கள் நேற்று விமானம் மூலம் புறப்​பட்​டுச் சென்​றனர்.

இதுகுறித்து ஐசிசி வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “கடந்த 24 மணி நேரத்​துக்​குள் தென் ஆப்​பிரிக்க அணியைச் சேர்ந்த 29 பேரும், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யைச் சேர்ந்த 16 பேரும் பல்​வேறு விமானங்​கள் மூலம் தாய்​நாட்​டுக்கு அனுப்​பப்​பட்​டனர்.

போர்​மேகங்​கள் சூழ்ந்​துள்ள கடின​மான சூழ்​நிலை​யில் அவர்​களை பத்​திர​மாக தாய்​நாட்​டில் சேர்ப்​ப​தற்​கான பணி​களை ஐசிசி செய்​துள்​ளது” என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வீரர்கள் தாயகம் புறப்பட்டனர்
ஈரானின் ‘ஆயில்’ ஆயுதம்... போரில் ட்ரம்ப்புக்கு சேதாரமா? - ஒரு நிலவரப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in