டி20 தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்

டி20 தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்
Updated on
1 min read

துபாய்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் ஓர் இடம் முன்னேறி நியூஸிலாந்தின் டேரில் மிட்செல்லை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

டி20 தரவரிசையில் 15 வயதாகும் இந்திய அணியின் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேறி 536 புள்ளிகளுடன் 48-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரில் சூர்யவன்ஷி 50.33 சராசரியுடன் 151 ரன்கள் சேர்த்திருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் 910 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

டி20 தரவரிசையில் சூர்யவன்ஷி 230 இடங்கள் முன்னேற்றம்
டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in