

ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 13-21, 17-21 என்ற செட் கணக்கில் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுஃபெயிடம் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிச்சஃபோன் தீரத்சகுலிடம் 18-21, 20-22 என்ற செட் கணக்கில் போராடி வீழ்ந்தார்.