ஷுபம் பண்​டிர் 117*, யாவர் ஹாசன் 88 ரன் விளாசல்: முதல் நாளில் ஜம்மு & காஷ்மீர் வலுவான தொடக்கம்

ஷுபம் பண்​டிர் 117*, யாவர் ஹாசன் 88 ரன் விளாசல்: முதல் நாளில் ஜம்மு & காஷ்மீர் வலுவான தொடக்கம்
Updated on
1 min read

ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரின் இறு​திப் போட்​டி​யில் நேற்று கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் கர்நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஜம்மு & காஷ்மீர் அணி பேட்​டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணிக்கு தொடக்​கம் சற்று அதிர்ச்​சி​யாக இருந்​து. தொடக்க வீர​ரான கும்​ரான் இக்​பால் 6 ரன்​களில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதையடுத்து களமிறங்​கிய ஷுபம் பண்​டிர், யாவர் ஹாசனுடன் இணைந்து பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தார்.

139 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை பிரசித் கிருஷ்ணா பிரித்​தார். யாவர் ஹாசன் 150 பந்​துகளில், 13 பவுண்டரிகளுடன் 88 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் முதல் சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதைத் தொடர்ந்து களமிறங்​கிய கேப்​டன் பராஸ் டோக்ரா 9 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரிட்​டயர்டு ஹர்ட் முறை​யில் வெளி​யேறி​னார். அவரைத் தொடர்ந்து களம்​பு​குந்த அப்துல் சமத் அதிரடி​யாக விளை​யாடி​னார்.

மறு​முனை​யில் நிதான​மாக விளை​யாடிய ஷுபம் பண்​டிர் 186 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் சதம் அடித்​தார். மட்​டையை சுழற்​றிய அப்​துல் சமத் 64 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் கடந்​தார்.

முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் ஜம்மு & காஷ்மீர் அணி 87 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 284 ரன்​கள் எடுத்​தது. ஷுபம் பண்​டிர் 221 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 12 பவுண்டரிகளு​டன் 117 ரன்​களும், அப்​துல் சமத் 67 பந்துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கைவசம் 8 விக்​கெட்​கள் இருக்க இன்​று 2-வது ​நாள்​ ஆட்​டத்​தை தொடர்​ந்​து விளை​யாடு​கிறது ஜம்​மு & ​காஷ்மீர்​ அணி.

ஷுபம் பண்​டிர் 117*, யாவர் ஹாசன் 88 ரன் விளாசல்: முதல் நாளில் ஜம்மு & காஷ்மீர் வலுவான தொடக்கம்
தனித்து விடப்பட்ட தவெக: அதீத நம்பிக்கையில் இருக்கிறாரா விஜய்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in