​வி​மானத்​தில் டிக்​கெட் இல்லாததால் ரயி​லில் பயணம் செய்த ஷிவம் துபே

​வி​மானத்​தில் டிக்​கெட் இல்லாததால் ரயி​லில்  பயணம் செய்த ஷிவம் துபே
Updated on
1 min read

மும்பை: விமானத்​தில் டிக்​கெட் இல்​லாத​தால் ரயி​லி​யின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்​டி​யில் சாதாரண பயணி போல இந்திய கிரிக்​கெட் வீரர் ஷிவம் துபே பயணித்த சுவாரஸ்ய தகவல் தற்​போது வெளி​யாகி​யுள்​ளது. கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஐசிசி டி20 கிரிக்​கெட் போட்​டி​யின் இறுதி ஆட்​டத்​தில் இந்​தியா வெற்றி பெற்று கோப்​பையைக் கைப்​பற்​றியது.

இந்​தத் தொடர் முழு​வதுமே ஷிவம் துபே சிறப்​பாக விளையாடி​யிருந்​தார். போட்டி முடிந்த நிலை​யில் அகமதாபாத்​திலிருந்து மும்​பைக்கு திரும்ப ஷிவம் துபே விமானத்​தில் டிக்​கெட் பதிவு செய்ய முயன்​றார். ஆனால் அனைத்து விமானங்​களி​லும் டிக்​கெட் இல்லை என்று தெரிய​வந்​தது.

இதையடுத்து அகம​தா​பாத்​திலிருந்து அதி​காலை 5.10 மணிக்கு புறப்​படும் மும்பை ரயி​லின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி தனக்​கும், தனது குடும்​பத்​தாருக்​கும் புக்​கிங் செய்தார். இதையடுத்து அதி​காலை ரயில் நிலை​யத்​துக்கு வந்த துபே, காரிலேயே காத்​திருந்​தார். ரயில் நிலை​யத்​தில் தன்னை யாராவது அடை​யாளம் கண்​டு​கொண்​டால், ரசிகர்​கள் சூழ்ந்​து​கொள்​வார்கள் என்ற பயத்​தால் அவர் காரிலேயே இருந்​தார்.

ரயில் புறப்​படு​வதற்கு சில நிமிடங்​களுக்கு முன்பு அவர் ரயி​லில் ஏறி​னார்​.மேலும் அவர் முகக்​கவசம் அணிந்​து​கொண்​டும், தலை​யில் தொப்பி அணிந்​து​கொண்டு தன்னை மறைத்​துக்​கொண்​டார். பின்​னர் பெட்​டி​யின் அப்பர்​-பெர்த் படுக்​கை​யில் ஏறி படுத்​துக்​கொண்​டார்.

அப்​போது டிக்​கெட் பரிசோதகர் வந்து பெயரைப் பார்த்துவிட்டு ஷிவம் துபே என்​றால், கிரிக்​கெட் வீரரா என்று துபே​வின் மனை​வி​யிடம் கேட்​டுள்​ளார். ஆனால் அதற்கு ஷிவம் துபே​வின் மனைவி கூறும்​போது, “அவ​ரா... அவர் ஏன் இங்கு வரப்​போகிறார்” என்று சமாளித்​துள்​ளார்.

3-ம் வகுப்பு ஏ.சி.பெட்​டி​யில் சா​தாரண பயணி போல ஷிவம் துபே பயணித்த தகவல் அவரது ரசிகர்​களுக்கு ஆச்சரி​யத்​தை ஏற்படுத்தியுள்ளது.

​வி​மானத்​தில் டிக்​கெட் இல்லாததால் ரயி​லில்  பயணம் செய்த ஷிவம் துபே
அன்புமணி தற்போது பாமகவின் உறுப்பினர் கூட கிடையாது: ராமதாஸ் பதில் மனு தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in